இந்தியாவின் மாபெரும் வெற்றி… கல்வான் பகுதியில் முற்றிலுமாக பின் வாங்கிய சீனா…!!!

சீன இராணுவம் கால்வன் கோக்ரா, மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியை முழுவதுமாக காலி செய்துள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : Jul 9, 2020, 08:24 PM IST
  • வெள்ளிக்கிழமை அன்று, பிரதமர் நரேந்திர மோடி லடாக் சென்று சீனாவுக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பினார்.
  • எல்லை பிரச்சனையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) மற்றும் NSA அஜித் தோவல் இருவரும் இந்தியா மற்றும் சீனாவின் நிரந்தர பிரதிநிதிகள்.
  • இரு நாடுகளும் எல்லையில் சமாதானம் செய்து கொண்டு, எல்லாவிதமான வேறுபாடுகளையும் தவிர்க்க வேண்டும் என இரு நாடுகளும் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
இந்தியாவின் மாபெரும் வெற்றி… கல்வான் பகுதியில் முற்றிலுமாக பின் வாங்கிய சீனா…!!!

இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக, சீன இராணுவம் கால்வன் உட்பட கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதியில் இருந்து சீன இராணுவம் முற்றிலுமாக பின் வாங்கியது.

புதுடெல்லி ( New Delhi): லடாக் (Ladakh) எல்லையில் இந்தியா-சீனாவிற்கு இடையிலான மோதலை அடுத்து, (India-China Face Off) பதற்றம் அதிகரித்து வந்தது, இந்நிலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன், சீனாவின் வெளியுறவு அமைச்சர்  ஞாயிற்றுக்கிழமை அன்று வீடியோ கால் மூலம் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து, சீன இராணுவம் (PLA) எல்லையிலிருந்து சுமார் 2 கிமீட்டர் அளவு பின்வாங்கியதாக  தகவல்கள் வந்துள்ளன. இப்போது,  சீன இராணுவம் கோக்ரா, கால்வன் மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியை முழுவதுமாக காலி செய்துள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ | "திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..." தாத்தா நினைவேந்தலில் தலை காட்டினார் கிம் ஜாங் உன்

கால்வன் பள்ளத்தாக்கு மற்றும் கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுபாட்டு கோடான் லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல்,  (LAC)  பகுதிக்கு அருகில் உள்ள மற்ற பகுதிகளிலிருந்து பின்வாங்க சீன மற்றும் இந்திய துருப்புக்கள் 'ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை' எடுத்துள்ளதாகவும், நிலைமை  மேம்பட்டு வருகிறது' என்றும் அனைத்து பகுதிகளிலிருந்தும் துருப்புக்களை விரைவாக அகற்ற இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர் சீனா கூறியது.

சீன (China) இராணுவம் கிழக்கு லடாக்கில் உள்ள  ஹாட் ஸ்பிரிங்கிலிருந்து அனைத்து தற்காலிக கட்டமைப்புகளையும் அகற்றி அனைத்து துருப்புக்களையும் அகற்றியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் மேற்கூறிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ALSO READ | உலகளாவிய மறுமலர்ச்சியில் இந்தியாவின் பங்கு மகத்தானதாக இருக்கும்: PM Modi

வெள்ளிக்கிழமை அன்று, பிரதமர் நரேந்திர மோடி லடாக் சென்று சீனாவுக்கு ஒரு  வலுவான செய்தியை அனுப்பினார். வீரர்களால் தான் சமாதானத்திற்கு வர முடியும் என்றும்,  பலவீனமான ஒருவர் ஒருபோதும்  சமாதானத்தை பற்றி பேச முடியாது என்று கூறினார். இந்தியாவின் வலுவான ராணுவ சக்தியை சீனாவும் உணர்ந்துள்ளது, எனவே திங்களன்று, சீன இராணுவம் LAC  பகுதியில் உள்ள தனது கூடாரங்களை அகற்றத் தொடங்கியது.

திங்களன்று சீனா தனது ராணுவத்தை பின்வாங்குவதற்கான செயல்முறையை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. இதை சீனாவின் வெளியுறவு அமைச்சகமும் உறுதிப்படுத்தியது. திங்களன்று, சீனாவின் வெளியுறவு அமைச்சர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் ஞாயிற்றுக்கிழமை வீடியோ கால மூலம் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தியது தெரியவந்தது.

எல்லை பிரச்சனையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) மற்றும் NSA அஜித் தோவல் (Ajit Doval) இருவரும் இந்தியா மற்றும் சீனாவின் நிரந்தர பிரதிநிதிகள். இந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு, இரு நாடுகளும் அறிக்கைகளை வெளியிட்டன.  இரு நாடுகளும் எல்லையில் சமாதானம் செய்து கொண்டு, எல்லாவிதமான வேறுபாடுகளையும் தவிர்க்க வேண்டும் என்பதோடு, சமாதானத்தை ஏற்படுத்த இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும் என்றும், பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்  என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More Stories

Trending News