லடாக்கில் உள்ள எல்லைப் பகுதியான LAC-யில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியாவின் உளவு செயற்கைக்கோள் EMISAT சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) ராணுவ நிலைகள் பற்றிய தகவல்களை சேகரிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. கௌடில்யாவைக் கொண்டு செல்லும் EMISAT, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) இயக்கப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ELINT (மின்னணு உளவுத்துறை) தொகுப்பான கௌடில்யா, அருணாச்சல பிரதேசத்திற்கு அருகில் சீன ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் நிலை கொண்டிருக்கும் சீன துருப்புக்களைக் கடந்து சென்றது.
EMISAT என்பது 436 கிலோகிராம் எடையுள்ள ISRO-வின் மினி சேட்டிலைட் -2 பஸ்ஸைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள ஒரு செயற்கைக்கோளாகும். 2019, ஏப்ரல் 1 அன்று, இந்த செயற்கைக்கோள், 748 கி.மீ உயரத்திலுள்ள சூரிய-ஒத்திசைவான துருவ சுற்றுப்பாதையில், PSLV-C45-யால் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் மின்காந்த நிறமாலை அளவீட்டுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
EMISAT நாட்டின் முதல் மின்னணு கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இது மிகவும் சக்திவாய்ந்த மின்னணு உளவுத்துறை / கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இதை ISRO மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இணைந்து இந்தியாவில் உருவாக்கியுள்ளன.
விண்ணிலிருந்து பணிபுரியும் 436-கிலோ எடையுள்ள மின்னணு நுண்ணறிவு கொண்ட ELINT ஆயுதப் படைகளின் சூழ்நிலை விழிப்புணர்வுக்கு பெரும் உதவியாக இருக்கும். ஏனெனில் இது எல்லைகளில் வைக்கப்பட்டுள்ள எதிரிகளுடைய ரேடார்களின் இருப்பிடத்தையும் தகவல்களையும் வழங்கும். இது தற்போதைய நிலம் மற்றும் விமானம் சார்ந்த ELINT க்கு மற்றொரு பரிமாணமாக இருக்கும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
DRDO பேலோடிற்காக செயற்கைக்கோள் உடற்பகுதியை உருவாக்கியுள்ள ISRO, இந்த விண்கலம் மின்காந்த நிறமாலையை அளவிடும் என்று கூறியது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் 2013-14 ஆம் ஆண்டின் வருடாந்திர அறிக்கையானது கௌடில்யா பணித்திட்டத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தது. இது விண்ணில் இருக்கும் ELINT அமைப்புக்கானது.
ALSO READ: Hope என்ற நம்பிக்கை விண்கலனை செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக அனுப்பியது UAE
ELINT ஆனது இடைமறிக்கப்பட்ட சமிக்ஞைகளின் பதிவுகள் மற்றும் பகுப்பாய்வுகளை உள்ளடக்கியது. இது, ஒரு ரேடரின் RF சிக்னேசரை உருவாக்க உதவுகிறது. இதன் மூலம், அடுத்தடுத்த சந்திப்புகளில் ரேடாரைக் கண்டறிந்து விரைவாக அடையாளம் கண்டு விடலாம். எதிரிகளின் ரேடார்களை உடனடியாக கண்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.
ALSO READ: செவ்வாய் கிரகத்திற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் விண்கலன் திட்டம் ஒத்திவைப்பு!!