ராஜ்தானி எக்ஸ்பிரஸ் முன்பதிவு காலத்தை 7 நாட்களில் இருந்து 30 நாட்களாக அதிகரிக்க முடிவு

ராஜ்தானி ரயிலின் சிறப்பு இட ஒதுக்கீடு முறையை இந்திய ரயில்வே (Indian railways) மாற்றியுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு (ARP) காலத்தை 7 நாட்களில் இருந்து 30 நாட்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 23, 2020, 12:53 AM IST
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் முன்பதிவு காலத்தை 7 நாட்களில் இருந்து 30 நாட்களாக அதிகரிக்க முடிவு

புது டெல்லி: ராஜ்தானி ரயிலின் சிறப்பு இட ஒதுக்கீடு முறையை இந்திய ரயில்வே (Indian railways) மாற்றியுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு (ARP) காலத்தை 7 நாட்களில் இருந்து 30 நாட்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நான்காவது ஊரடங்கு காலத்தில் 15 ராஜதானி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களை மே 12 அன்று இயக்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு செய்ய முடியாது. இந்த ரயில்களில் ஆர்.ஏ.சி (RAC) மற்றும் காத்திருப்பு பட்டியல் (Waiting List) வெளியிடப்படும். இருப்பினும், காத்திருப்பு பட்டியல் கொண்ட பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ரயில் புறப்பட நான்கு மணி நேரத்திற்கு முன் முதல் பயணிகள் லிஸ்ட் வெளியிடப்படும். இரண்டாவது பட்டியல் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக வரும்.

ஜூன் 1 முதல் 200 சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் இந்திய ரயில்வே 12.5 லட்சம் பயணிகளுக்கு 5.72 லட்சம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளது என்பதை உங்களுக்கு சொல்கிறோம். ஜூன் 1 முதல் 200 ரயில்களில் 12,54,706 பயணிகளுக்கான மொத்தம் 5,72,219 டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாட்டில் வியாழக்கிழமை காலை 200 சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவை ரயில்வே தொடங்கியது. இருப்பினும், பிற்பகுதியில், பி.ஆர்.எஸ் கவுண்டர்கள், தபால் நிலையங்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி முகவர்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என்றும் ரயில்வே அறிவித்தது.

டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக நாடு முழுவதும் பல இடங்களில் பிஆர்எஸ் கவுண்டர்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. கொரோனா வைரஸ் பரவுவதைக் கையாள்வதற்காக நாடு தழுவிய பொது முடக்கத்திற்கு மத்தியில் மார்ச் 25 முதல் பயணிகள் ரயில் சேவைகளை ரயில்வே ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News