விரைவில் ரயில் கட்டணம் அதிகரிக்கக் கூடும்; மத்திய அரசின் திட்டம் என்ன?

நாடு முழுவதும் இயங்கும் பல்வேறு பயணிகள் ரயில்களின் அனைத்து பிரிவுகளிலும் கட்டணங்களை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் ஒரு பட்டியலை தயாரித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 26, 2019, 07:33 PM IST
விரைவில் ரயில் கட்டணம் அதிகரிக்கக் கூடும்; மத்திய அரசின் திட்டம் என்ன? title=

ரயில் மூலம் பயணம் செய`செய்ய வேண்டும் என்றால், இப்போது அதிக அளவில் பணம் செலவழிக்க வேண்டியதாக இருக்கும். ஆம், ரயில் கட்டணத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரயில் கட்டணத்தை சுமார் 10 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதிகரிக்கப்படும் கட்டணத்தை விரைவில் மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் அமல்செய்ய உள்ளது.

அடுத்த வாரம் முதல் அனைத்து ரயில்களுக்கும் இந்திய ரயில்வே கட்டணம் அதிகரிக்கும். கட்டண உயர்வு ஒரு கிலோமீட்டருக்கு 5 முதல் 40 பைசா வரை இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார மந்தநிலையை அடுத்து இந்திய ரயில்வே நிதிபற்றாக்குறையால் தள்ளாடி வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ரயில்வேயின் சரக்கு வருவாய் ரூ .19,412 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரயில் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டத்திற்கு ரயில்வே வாரியத் தலைவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக ரயில்வே அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது. விரைவில், பல்வேறு ரயில்களின் கட்டண உயர்வு அறிவிக்கப்படும். நாடு முழுவதும் இயங்கும் பல்வேறு பயணிகள் ரயில்களில் அனைத்து பிரிவுகளிலும் கட்டணங்களை அதிகரிக்க அமைச்சகம் ஒரு பட்டியலை தயாரித்துள்ளது.

AC, ஸ்லீப்பர் வகுப்பு, சாதாரண ரயில் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு:
நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, அனைத்து பிரிவுகளிலும் பயணிகளின் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின்படி, ஏசி, ஸ்லீப்பர் மற்றும் ஜெனரல் கிளாஸின் கட்டணம் அதிகரிக்கும், அத்துடன் மாதாந்திர ரயில்வே பயன அட்டை (Railyway Pass) விலையும் அதிகரிக்கப்பட்ட உள்ளது. இருப்பினும், எவ்வளவு கட்டணங்களை உயர்த்தலாம் என்பது குறித்து அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது. இருந்தபோதிலும், ரயில்வே கட்டணங்கள் சுமார் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரக்கு ரயில் கட்டணம் குறையக்கூடும்:
சாலை மார்க்கமாக சரக்கு கொண்டு செல்லப்படுவதற்கான கட்டணம் குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு, ரயில்வேயின் சரக்கு கட்டணத்தை குறைக்க ரயில்வே அமைச்சகம் பரிசீலித்துள்ளது. தற்போதைக்கு சரக்கு கட்டணம் குறைக்கப்பட்டால் தான் வருவாய் உயரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த முடிவு வருமானத்தை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News