அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு!

துருக்கி நாட்டின் பொருளாதார பாதிப்பு, இந்திய ரூபாயின் மீது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.88-ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 12, 2018, 10:01 AM IST
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு! title=

துருக்கி நாட்டின் பொருளாதார பாதிப்பு, இந்திய ரூபாயின் மீது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.88-ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்ததுடன், துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை உயர்த்தி அமெரிக்கா ஆணை பிரப்பித்தது. இதன் காரணமாக துருக்கியின் பணமதிப்பு வெகுவாக சரிந்து, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துருக்கி நாட்டின் பொருளாதார பாதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவதை கட்டுப்படுத்தும்படி ரிசர்வ் வங்கியை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ள நிலையில், ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவடைந்துள்ளது.  இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் 18 பைசா சரிந்து டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.72.87 ஆக உள்ளது.  ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது.

 

Trending News