ஜம்மு காஷ்மீர்: சண்டையில் ராணுவம் 7 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது

Last Updated : Jun 24, 2016, 04:10 PM IST
ஜம்மு காஷ்மீர்: சண்டையில் ராணுவம் 7 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது title=

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று முதல் தொடர்ந்து நடத்தப்பட்ட வெவ்வேறு என்கவுன்ட்டர்களில் இதுவரை 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "இன்று காலை குப்வாரா மாவட்டம் பெத்தா வடார் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வந்தது. இதனையடுத்து, பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். அப்போது வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. குப்வாரா மாவட்டத்தில் நேற்று  முதல் வெவ்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் இதுவரை 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.

Trending News