புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஐந்தாம் கட்ட சட்டசபை தேர்தல் (Jharkhand Assembly Eelection) இன்றுடன் (டிசம்பர் 20) முடிவடைய உள்ளது. 29 பெண்கள் உட்பட 237 வேட்பாளர்களின் தலைவிதியை தீர்மானிக்க தற்போது 16 இடங்களில் வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. அமைச்சர் ரந்தீர் சிங்குடன் முன்னாள் முதல்வரும், ஜே.எம்.எம் தலைவருமான ஹேமந்த் சோரனும் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு மாலை 5 மணிக்கு முடிவடையும். சில இடங்களில் வாக்குப்பதிவு மாலை 3 மணியுடன் முடிவடையும்.
சட்டசபை தேர்தலின் இறுதிக் கட்டத்தில் வாக்குப்பதிவு (Five-Phase) ராஜ்மஹால், போரியோ (எஸ்.டி), பர்ஹைட் (எஸ்.டி), லிதிபாரா (எஸ்.டி), பக்கூர், மகேஷ்பூர் (எஸ்.டி), சிகரிபாரா (எஸ்.டி), நல்லா, ஜம்தாரா, தும்கா (எஸ்.டி), சந்தல் பர்கானா, ஜமா (எஸ்.டி), ஜர்முண்டி, சரத், பொரேயாஹத், கோடா மற்றும் மகாகமா போன்ற இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
40,05,200 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் 237 வேட்பாளர்களின் தேர்தல் தலைவிதியை தீர்மானிக்க உள்ளனர். நவம்பர் 30 முதல் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில், முந்தைய நான்கு கட்டங்களில் 65 இடங்களில் ஏற்கனவே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இன்று 16 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்றுடன் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் முடிவடைந்து விடும். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இறுதிக் கட்ட வாக்குப்பதிவில் (Phase 5) மக்கள் அதிக அளவில் வாக்களிக்குமாறு பிரதமர் மோடி (Narendra Modi) கேட்டுக்கொண்டு உள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் ஐந்தாவது மற்றும் கடைசி கட்ட வாக்களிப்பு நடைபெறுகிறது. இந்த ஜனநாயக கடமையில் அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்யமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
झारखंड विधानसभा चुनाव में आज पांचवें और आखिरी चरण का मतदान है। सभी मतदाताओं से मेरी विनती है कि वे लोकतंत्र के इस महोत्सव में शामिल होकर रिकॉर्ड मतदान करें।
— Narendra Modi (@narendramodi) December 20, 2019
2000 ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட பின்னர் இது ஜார்க்கண்டில் நடைபெறும் நான்காவது சட்டமன்றத் தேர்தலாகும். ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலின் (Jharkhand Assembly election) கருத்துக் கணிப்பு முடிவுகளை (Jharkhand Exit Poll Results 2019), இன்று கடைசி கட்டத்திற்கான வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் மாலை செய்தி சேனல்கள் வெளியிடும்.
நியாயமான, அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடப்பதற்காக ஆறு மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 40,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் (Election Commission) தெரிவித்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல்கட்ட வாக்குப்பதிவு 13 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 20 தொகுதிகளுக்கு டிசம்பர் 7 ஆம் தேதி நடத்தப்பட்டது. 17 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்ட தேர்தல் டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெற்றது. நான்காம் கட்ட வாக்குப்பதிவு கடந்த திங்கக்கிழமை (டிசம்பர் 16) நடந்து முடிந்தது. இறுதியாக 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (டிசம்பர் 20) நடைபெற்று வருகிறது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.