முத்தலாக் தீர்ப்பு: டிவிட் செய்த பிரதமர் மோடி!!

Last Updated : Aug 22, 2017, 03:19 PM IST
முத்தலாக் தீர்ப்பு: டிவிட் செய்த பிரதமர் மோடி!! title=

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய முத்தலாக் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.

இஸ்லாமிய பெண்களுக்கு விவகாரத்து வழங்கும் முத்தலாக் முறை செல்லாது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியுள்ளது. மேலும் இவ்விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை இல்லாத வகையில் பார்லிமென்ட்டில் சட்டம் இயற்ற சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மதம் தொடர்பான விவகாரங்களில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை பிரதமர் நரேந்திரா மோடி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

முத்தலாக் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இஸ்லாமிய பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில்உள்ளது. மேலும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் கூறியுள்ளார்.

 

 

Trending News