கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!
கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பலரும் நிவாரண பொருட்களை வழங்கி வழங்கி வருகின்றனர். இதை தொடர்ந்து, அவர் தமது டிவிட்டர் பதிவில் கஜா புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் தமிழக மக்களுக்கு கேரளா துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார். நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு குடிநீர், தார்ப்பாய்கள், மெழுகுவர்த்திகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், புத்தாடைகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் இதனை கேரள மாநில இயற்கைப் பேரிடர் மீட்பு மையம் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.