கேரளா மாநில திரைப்பட விருதுகள் - முழுவிவரம் உள்ளே!

"கேரளா மாநில திரைப்பட விருதுகள் 2018"-க்கு தேர்வானவர்கள் முழு பட்டியல் இன்று வெளியானது!

Updated: Mar 8, 2018, 09:16 PM IST
கேரளா மாநில திரைப்பட விருதுகள் - முழுவிவரம் உள்ளே!

திருவனந்தபுரம்: "கேரளா மாநில திரைப்பட விருதுகள் 2018"-க்கு தேர்வானவர்கள் முழு பட்டியல் இன்று வெளியானது!

2017 ஆம் ஆண்டில் வெளியான படங்களையும், அப்பட கலைஞர்களின் திறமைகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளது. கேரள மாநில அமைச்சர் AK பாலன் அவர்கள் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார். 

இந்த பட்டியலின் படி சிறந்த நடிகர்களுக்கான விருதினை பார்வதி மற்றும் இந்திரான்ஸ் தட்டிச்சென்றனர்.

மேலும் மம்மூட்டி, மோகன்லால், திலீப், பிரித்விராஜ், துல்கர் சல்மான், ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், பிஜூமேனன், டோவினோ தாமஸ், குஞ்சாக் போவன், பஹத் பாசில், நிவின் பாலி மற்றும் ஜெயசூரியா போன்ற முன்னணி நடிகர்களும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

இப்பட்டியலின் முழுவிவரம்...

 • சிறந்த திரைப்படம் - ஒட்டமுரி வெளிச்சம்
 • இரண்டாவது சிறந்த திரைப்படம் - ஆடான்
 • சிறந்த நடிகர் - இந்திரான்ஸ் (ஆளுருக்கம்)
 • சிறந்த நடிகை - பார்வதி (டேக் ஆப்)
 • சிறந்த இயக்குனர் - லிஜோ ஜோஸ் பள்ளிசேரி (ஏ மா யூ)
 • சிறந்த குணசித்திர நடிகை - அலென்சியர் தொண்டிமுதலும் திரிக்ஷாசிகளும்
 • சிறந்த குணசித்திர நடிகர் - பாலி வால்சன் (ஏ மா யூ-ஒட்டமுரி வெளிச்சம்)
 • சிறந்த இசையமைப்பாளர் - ஏ.கே. அர்ஜுனன் (பயானகம்)
 • சிறந்த பாடலாசிரியர் - பிரபா வர்மா (ஒலதின் பிரம் க்ளாண்ட்)   
 • சிறந்த பின்னணி இசை - கோபி சுந்தர் (டேக் ஆப்)
 • சிறந்த பின்னணி பாடகர் - ஷாபாஸ் அமன் (மிசில்லில் நின்னும் மாயநதி)
 • சிறந்த பின்னணி பாடகி - சித்ரா கிருஷ்ணகுமார் (விமானம்)
 • சிறந்த அறிமுக இயக்குனர் - மகேஷ் நாராயணன் (டேக் ஆப்)
 • சிறந்த குழந்தை நடிகர் - அபிநாத்
 • சிறந்த குழந்தை நடிகை - நட்சத்திரா (ரக்ஷத்கரி பைஜூ)
 • சிறந்த ஒளிப்பதிவாளர் - மனீஷ் மாதவன் (ஏடன்)
 • சிறந்த கதை எழுத்தாளர் - எம்.ஏ. சிஹ்ச்ச்த் (கினார்)
 • சிறந்த திரைக்கதை எழுத்தாளர் -  சஜீவ் பாழூர் (தொண்டிமுதலும் திரிக்ஷாசிகளும்)
 • சிறந்த படத்தொகுப்பாளர் - அப்பு பட்டாத்ரி (ஒட்டமுரி வெளிச்சம் மற்றும் வீரம்)
 • சிறந்த கலை இயக்குநர் - சாந்தோஷ் ராமன் (டேக் ஆப்)
 • சிறந்த ஒலி எடிட்டிங் - பிரதாத் தாமஸ் (ஏடன்)