கருப்பாக பிறந்த பெண் குழந்தை-விஷம் வைத்துக்கொன்ற கொடூர தந்தை! மனதை உலுக்கிய சம்பவம்..

Vijayawada Man Kills Daugher : 18 மாத பெண் குழந்தையை அதன் தந்தையே விஷம் வைத்து கொன்றுள்ள விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குழந்தை இறந்தது எதனால்? இதோ முழு தகவல்.  

Written by - Yuvashree | Last Updated : Apr 8, 2024, 05:43 PM IST
  • பெற்ற மகளை கொன்ற கொடூர தந்தை
  • விஜயவாடாவில் பயங்கர சம்பவம்
  • முழு பின்னணி என்ன?
கருப்பாக பிறந்த பெண் குழந்தை-விஷம் வைத்துக்கொன்ற கொடூர தந்தை! மனதை உலுக்கிய சம்பவம்.. title=

Vijayawada Man Kills Daugher : பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான வன்கொடுமைகளை தடுக்க அரசு எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டாலும், இன்னும் சில மனநிலை மாறாத மனிதர்களால் பெண் சமுதாயம் சொல்ல முடியாத அளவிற்கு இன்னும் பல கொடுமைகளையும் வேதனைகளையும் சந்தித்து வருகிறது. பெண் குழந்தை பிறந்தாலே அதற்கு கள்ளிப்பால் ஊற்றி கொன்று வந்த நமது சமுதாயம், மாறி விட்டது போலும் என்று நினைக்கும் பாேதெல்லாம் அந்த எண்ணம் வருவதே தவறு என நிரூபிக்கும் வகையில் நாட்டின் ஏதேனும் ஒரு மூலையில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகின்றன. அப்படி ஒரு சம்பவம்தான், தற்போது விஜயவாடாவில் நடைப்பெற்றிருக்கிறது. தனது சொந்த தந்தையின் கைகளாலேயே விஷம் வைத்து கொள்ளப்படும் அளவிற்கு அந்த குழந்தை செய்த தவறு என்ன தெரியுமா? கருப்பாக பிறந்தததுதான். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை முழுமையாக பார்க்கலாம். 

விஜயவாடாவில் நடைப்பெற்ற சம்பவம்:

விஜயவாடாவில் உள்ள கரெம்புடி காவல் நிலையத்தில் 18 மாத பெண் குழந்தையை கருப்பாக இருந்ததால் அதன் தந்தையே அதனை விஷம் வைத்து கொன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புகாரை இறந்து போன குழந்தையின் தாய் கொடுத்துள்ளார். அதில் , பிரசாதத்தில் விஷம் கலந்து கொடுத்து குழந்தையை கொன்ற பிறகு, தன்னிடம் வந்து வலிப்பு ஏற்பட்டுதான் குழந்தை இறந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் சண்டையிட்டதாக அப்பெண் தெரிவித்திருக்கிறார்.

கருப்பாக பிறந்த குழந்தை..

விஜயவாடா, பொம்மராஜுபல்லே என்ற கிராமத்தை சேர்ந்தவர், மகேஷ். இவருக்கும், ஷர்வானி என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது. இந்த குழந்தைக்கு அக்ஷயா என பெயர் வைத்திருக்கின்றனர். பிறந்த குழந்தை கருப்பாக இருந்ததால், ஷர்வானியை மகேஷும் அவரது குடும்பத்தாரும் கொடுமை படுத்தியுள்ளனர். அது மட்டுமன்றி, தன் குழந்தையின் அருகே தன்னை இருக்க முடியாத படி அவர்கள் செய்ததாகவும் அந்த பெண் தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். 

மேலும் படிக்க | பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவி... தேர்வு எழுத அனுமதிக்காத அவலம் - பகீர் சம்பவம்

உயிரிழப்பு..

கடந்த மார்ச் 31ஆம் தேதி, தனது குழந்தை மயக்கமடைந்த நிலையில் இருந்ததாகவும், குழந்தையின் மூக்கில் ரத்தம் வடிந்ததாகவும் குழந்தையின் தாய் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து குழந்தையை தூக்கிக்கொண்டு கரெம்புடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.  குழந்தை இறந்ததற்கு பொய்யான காரணத்தை உறவினர்களிடம் கூற வேண்டும் என, குழந்தையின் தாயிடம் வற்புறுத்தியிருக்கிறார், மகேஷ். 

கொலை முயற்சி:

குழந்தையின் உடல், இறந்ததற்கு சில மணி நேரத்திற்குள்ளாகவே புதைக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த குழந்தையின் தாய் ஷ்ரவாணி, உள்ளூர் பஞ்சாயத்தில் முறையிட்டிருக்கிறார். இதையடுத்து, உறவினர்கள் தன்னை எப்படியெல்லாம் துன்புறுத்தினர் என்பதை அவ்வூர் காவல் நிலையத்தில் தெரிவித்திருகிறார். 

குழந்தை அக்‌ஷயாவை ஏற்கனவே கொலை செய்ய முயற்சி செய்திருப்பதாக கூறும் ஷ்ரவாணி, குழந்தையை சுவற்றில் தூக்கி அடிப்பது, குழந்தையை ஒரு அறையில் தனியாக வைத்து பூட்டுவது, ஒரு டப் தண்ணீரில் குழந்தையை முக்குவது போன்ற செயல்களை செய்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். 

வழக்கு விசாரணை:

ஆந்திர பிரதேச குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், இந்த குழந்தையின் மரணம் குறித்த முழு விசாரணையை எடுக்க வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. தற்போது இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் போலீஸார், குழந்தையின் உடலை தோண்டி எடுத்து முழு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் படிக்க | 29 மணி நேரம் பெல்டால் அடித்து டார்ச்சர்! கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு-பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News