நீதிபதிகளின் நியமன விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்...!
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்ட வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று கோரிய மனு ஒன்றை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்த போது நீதிபதிகள் நியமன விவகாரம் குறித்த கருத்தை வெளியிட்டது.
நீதிபதி கே.எம். ஜோசப் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது ஊடகங்கள் மூலம் தவறான கருத்துகள் பரப்பப்பட்டதாக மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், நீதிபதிகள் நியமனத்தைப் பொருத்தவரை எங்களிடம் விட்டு விடுங்கள், அதில் யாரும் தலையிடாதீர்கள் என்று கண்டிப்புடன் தெரிவித்தனர்.