Tripura Assembly Elections Result 2023: பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது

Tripura Election Result 2023 Updates: திரிபுராவில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை. பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை

Last Updated : Mar 2, 2023, 09:46 PM IST
Live Blog

Tripura Election Result Highlights 2023: பிப்ரவரி 16-ம் தேதியன்று திரிபுரா மாநிலத்தில் 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 2018 தேர்தலில் திரிபுராவில் 44 இடங்களை கைபற்றி பாஜக கூட்டணி முதல் முறையாக வெற்றி பெற்றது. 2018 வரை கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்த திரிபுராவை முதன் முதலாக பாஜக வசமானது. 

திரிபுராவில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு மெஜாரிட்டி பெற 31 இடங்களில் வெல்ல வேண்டும். இந்தமுறை பாஜக கூட்டணி ஆட்சியைவீழ்த்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டு ஒன்றாக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. அதேபோல் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்துக் களமிறங்கியிருக்கிறது. தேர்தல் முடிவுகள் இன்று (மார்ச் 2) அறிவிக்கப்பட உள்ளது. யார் திரிபுராவில் ஆட்சியை பிடிப்பார்கள் enஎன்ற விவரங்களை அறிந்துக்கொள்ள இணைந்திருங்கள்.

2 March, 2023

  • 16:29 PM

    திரிபுரா, நாகாலாந்து வெற்றி.. மேகாலயாவில் தோல்வி
    வடகிழக்கு மூன்று மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளது. திரிபுராவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தாமரை மலர்ந்துள்ளது. அதே நேரத்தில், நாகாலாந்திலும், பிராந்தியக் கட்சியான என்டிபிபியுடன் கூட்டணி வைத்து பாஜக பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மேகாலயாவில் பாஜக நிச்சயம் பின்னடைவை சந்தித்துள்ளது. NPP உடனான தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு, அக்கட்சி தனியாக தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை

  • 13:39 PM

    திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023: 
    பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நாங்கள் முன்பே கூறியிருந்தோம் என்றும், இதுவரையிலான முடிவுகள் நாங்கள் தான் ஆட்சி அமைக்கிறோம் என்பதைக் காட்டுவதாக முதல்வர் மாணிக் சாஹா கூறியுள்ளார். பிரதமர் மோடி, அமித் ஷா, ஜேபி நட்டா, ராஜ்நாத் சிங் மற்றும் அனைத்து கட்சி தொண்டர்களுக்கும் நன்றி. பதவியேற்பு விழா நடைபெறும் தேதி குறித்து மத்திய தலைமையுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.

     

  • 13:10 PM

    திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023: பாஜக கூட்டணி முன்னிலை
    திரிபுராவில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, திரிபுராவில் ஆளும் பாஜக எதிர்க்கட்சியான சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி மற்றும் காங்கிரஸை விட முன்னணியில் உள்ளது. வடகிழக்கு மாநிலத்தில் 21 இடங்களில் 60 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

  • 12:53 PM

    திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023:
    மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக கூட்டணி தயாராக உள்ளது. அகர்தலாவில் உள்ள முதல்வர் மாணிக் சாஹாவின் இல்லத்தில் இனிப்புகள் விநியோகிக்கப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

  • 12:13 PM

    திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023: பாஜகவின் ரத்தன் லால் நாத் வெற்றி
    பாஜக வேட்பாளரும், கல்வி அமைச்சருமான ரத்தன் லால் நாத், மோகன்பூர் தொகுதியில் 7347 வாக்குகள் வித்தியாசத்தில் தனது போட்டியாளரான TMP தபாஸ் டேயைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். நாத் 19128 வாக்குகளையும், டே 11,781 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் பிரசாந்தா சென் சவுத்ரி 10,301 வாக்குகளையும் பெற்றனர்.

  • 11:55 AM

    திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023:
    சமீபத்திய தரவுகளின்படி, மொத்தம் சட்டமன்ற தொகுகளில் பாதி எண்ணிக்கையை பாஜக கூட்டணி எட்டுகிறது. ஆட்சியை தக்கவைக்க வாய்ப்புள்ளது.

     

  • 11:53 AM

    திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023: 
    தேர்தல் ஆணையத்தின்படி, 60 சட்டமன்றத் தொகுதிகளில் 33 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

     

  • 11:32 AM

    திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023: 
    திரிபுராவில் 60 இடங்களைக் கொண்ட சட்டசபையில் பாஜக பெரும்பான்மையை எட்டியுள்ள நிலையில், தற்போது வாக்கு தொடர்ந்து எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

  • 11:29 AM

    திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023: 
    திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையின் சமீபத்திய தரவுப்படி, ஆளும் பாஜக 26 இடங்களிலும், சிபிஐ(எம்) 12 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், திப்ரா மோதா கட்சி 11 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

  • 10:36 AM

    திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023: 
    - திரிபுராவில் பாஜக கூட்டணி 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது
    - திரிபுராவில் இடதுசாரி கூட்டணி  19 இடங்களில் முன்னிலை
    - திரிபுராவில் டிப்ரா 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

  • 10:30 AM

    திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023: 
    அகர்தலா சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சுதீப் ராய் பர்மன் 3668 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

  • 10:20 AM

    திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023:  60 இடங்களுக்கான நிலவரம்
    பாஜக கூட்டணி 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
    இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி 20 இடங்களில் முன்னிலை.
    டிப்ரா 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது

  • 10:18 AM

    திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023: 
    60 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கையில், பாஜக கூட்டணி 31 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இடதுசாரி கூட்டணி 19 இடங்களில் முன்னிலை.

  • 09:55 AM

    திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023: திரிபுரா பாஜக மாநிலத் தலைவர் பின்னடைவு
    பனமாலிபூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபால் ராய் முன்னிலை பெற்றுள்ளதால் பாஜக மாநிலத் தலைவர் ராஜீப் பட்டாச்சார்ஜி 300 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

  • 09:53 AM

    திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023: 
    - 30 இடங்களில் பாஜக முன்னிலை
    - இடதுசாரி 14 தொகுதிகளில் முன்னிலை
    - 9 இடங்களில் டி.எம்.பி முன்னணி
    - 6 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை

  • 09:50 AM

    காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை
    காங்கிரஸ் வேட்பாளர் சுதீப் ராய்பர்மன் அக்தலா தொகுதியிலிருந்து பாஜக வேட்பாளர் பாபியா தத்தாவை விட 1500 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

  • 09:36 AM

    பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை
    திரிபுராவில் பெரும்பான்மையான எண்ணிக்கை 31 ஆகும். 2018 தேர்தலில், பாஜக இங்கு 35 இடங்களை வென்றது.

  • 09:33 AM

    திரிபுராவில் பாஜக முன்னிலை வகிக்கிறது
    திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023: வாக்குகள் எண்ணத் தொடங்கி ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. பாஜக பெரும்பான்மையைப் பெறுவதாகத் தெரிகிறது. பாஜக 32 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் பின்தங்கி இருந்த சிபிஎம்-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வந்துள்ளது. இந்த கூட்டணி இப்போது 18 இடங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், டிப்ரா மோத்தா கட்சி 11 இடங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. 

  • 09:27 AM

    திரிபுரா முதல்வர் வேட்பாளர் மேனிக் சஹா  முன்னிலை
    திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023: போர்டோவலி தொகுதியிலிருந்து முதல் அமைச்சர் மானிக் சஹா முன்னிலை வகிக்கிறார்.

     

  • 09:08 AM

    திரிபுரா தேர்தல் 2023: பாஜக+ 27 இடங்களில் முன்னால்
    திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023: திரிபுரா மாநிலத்தில் என்.டி.ஏ அலையன்ஸ் பாதி இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி கட்சி பெ`பெரும்பான்மையை நோக்கி நெருங்குகிறது, 

  • 09:06 AM

    திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023: பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை
    பாஜக கூட்டணி 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, இடதுசாரி கூட்டணி 11 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மம்தாவின் டி.எம்.பி 6 இடங்களில் முன்னிலை

  • 08:49 AM

    அதிக இடங்களில் பாஜக முன்னிலை
    திரிபுரா சட்டமன்றத் தேர்தலில், ஆரம்பக்கட்டத்தில் பாஜக அதிக இடங்களை நோக்கி முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் பாஜக தற்போது 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில், டிப்ரா மோத்தாவின் கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது. அவர்கள் 11 இடங்களில் முன்னிலை. இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணி மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த கூட்டணி 10 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

  • 08:36 AM

    பாஜக பெரும்பான்மை
    ஆரம்பக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜக பெரும்பான்மையை நோக்கி செல்கிறது. வாக்குகள் எண்ணுவது அதிகாலை எட்டு மணிக்கு தொடங்கியது. திரிபுராவில், பாஜக 36 இடங்களைப் பெற்றுள்ளது. டிப்ரா மோத்தா 12 மற்றும் இடது-காங்கிரஸ் கூட்டணி தற்போது 10 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

  • 08:35 AM

    பாஜக முன்னிலை:
    திரிபுரா தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாஜக 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது

  • 08:12 AM

    என்.டி.ஏ கூட்டணி முன்னணி
    தேர்தல் முடிவுகள்: திரிபுரா மாநிலத்தில் பாஜக-ஐபிஎஃப்டி கூட்டணி 11 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இடதுசாரி 3 இடங்களில் முன்னிலை 

  • 08:10 AM

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியது...
    திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டசபை தேர்தல் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் லும்லா தொகுதி, ராம்கர் (ஜார்க்கண்ட்), ஈரோடு ஈஸ்ட் (தமிழ்நாடு), சாகார்டி (மேற்கு வங்கம்) மற்றும் காஸ்பா பெத், மகாராஷ்டிராவின் சின்ச்வாட் போன்ற சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

     

  • 07:53 AM

    நாங்கள் பெரும்பான்மையைப் பெறுவோம்- பாஜக
    நாங்கள் இன்று கட்சி அலுவலகத்தில் பூஜை செய்தோம். மாதா திரிபுரேஸ்வாரியிடம் ஆசீர்வாதங்களை பெற்றோம். திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும். நாங்கள் பெரும்பான்மையைப் பெறுவோம் - திரிபுரா பாஜக தலைவர் ராஜீப் பட்டாச்சார்ஜி

     

  • 07:45 AM

    திரிபுரா தேர்தல் முடிவு 2023: எந்த கட்சி எத்தனை இடங்களில் போட்டியிட்டது
    பாஜக 55 சட்டசபை இடங்களில் போட்டியிட்டது, அதன் கூட்டணி கட்சியான் ஐபிஎஃப்டி ஆறு தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. இடது முன்னணி 47 இடங்களிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் போட்டியிட்டது. இதற்கிடையில், டி.எம்.சி (TMC) 28 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது.

  • 07:40 AM

    திரிபுரா சட்டமன்ற தேர்தல் முடிவு: களத்தில் 259 வேட்பாளர்கள்
    வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக-ஐபிஃப்ட், மற்றும் இடது பார்ட்டி-காங்கிரஸ் கூட்டணிகள் மற்றும் டிப்ரா மோத்தாவின் பிராந்திய கட்சி ஆகியவற்றுக்கு இடையே ஒரு முக்கோண தேர்தல் களமாக திரிபுரா மாநிலம் உள்ளது. 

  • 07:17 AM

    காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

    அகர்லா, திரிபுரா | காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை. ஓட்டு கவுண்டிங் சென்டர், உமகாந்தா அகாடமி வளாகத்தின் காட்சிகள்.

     

     

  • 06:49 AM

    கருத்துக் கணிப்புகள்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) (சிபிஎம்) மற்றும் காங்கிரஸின் போட்டி கூட்டணிக்கு இந்தமுறையும் வாய்ப்பு இல்லை என்றும், பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அதேபோல திரிபுராவில் 29-36 இடங்களை பாஜக வெல்லும் என என்று ஜீ நியூஸ்-மேட்ரைஸ் வாக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிபிஎம் மற்றும் காங்கிரஸின் கூட்டணி 13 முதல் 21 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News