மத்திய பிரதேசத்திற்கான முதல்வர் அறிவிக்கப்பட்ட நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் யார் முதல்வர் பதவி ஏற்பார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அறிவிப்பார் என தெரிகிறது...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக யாரை நியமிக்கலாம் என்று மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். ஆலோசனைக்கு பின்னர் அம்மாநிலத்தின் முதல்வர் யார் என்பதை அறிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
இம்மாநிலத்திற்கான முதல்வர் இடத்திற்கு அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் பெயர் அடிப்பட்டு வருகின்றது. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி அசோக் கெலாட் முதல்வராகவும், சச்சின் பைலட் துணை முதல்வராகவும் பதவியேற்பார்கள் என தெரிகிறது.
The two most powerful warriors are patience and time.
- Leo Tolstoy pic.twitter.com/MiRq2IlrIg
— Rahul Gandhi (@RahulGandhi) December 13, 2018
முன்னதாக நேற்று நடைப்பெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாகவும், நேற்று மாலை 4 மணியளவிலேயே முதல்வர் பெயர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து ஜெய்ப்பூரில் உள்ள சச்சின் பைலட் மற்றும் சோக் கெலாட் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிகப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் மத்திய பிரதேச முதல்வராக மூத்த தலைவர் கமல்நாத் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பெயரினை ராகுல் அறிவிப்பார் என எதிர்பாரக்கப்படுகிறது.
முன்னதாக, 200 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளுக்கு டிசம்பர் 7, 2018 வாக்குப்பதிவு நடைப்பெற்றது. 199 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ஆம் தேதி நடைப்பெற்றது. வெளியான முடிவுகளின் படி காங்கிரஸ் 99 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும், பிஎஸ்பி 6 இடங்களிலும், இதர கட்சிகள் 21 இடங்களில் வெற்றி பெற்றனர். இதன்மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சியை அகற்றி, காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.