கோவா முதல்லவர் உடல்நலகுறைவால் மருத்துவமனையில் அனுமதி..!

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி..!

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Sep 14, 2018, 09:08 AM IST
கோவா முதல்லவர் உடல்நலகுறைவால் மருத்துவமனையில் அனுமதி..!
File Pic

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி..!

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், கடந்த மார்ச் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகு ஜூன் மாதம் இந்தியா திரும்பினார். அதன்பிறகு, இரண்டுமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை  எடுத்துக்கொண்டார். இந்த நிலையில், நேற்று மீண்டும் கோவாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து கோவா மாநில துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ, 'சிகிச்சைக்காக மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நலமாக உள்ளது' என்றார்.