டெல்லி: உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் டெல்லியில் காலமான, இந்திய விமானப் படை முன்னாள் தளபதி, மார்ஷல் அர்ஜன் சிங் இறுதி சடங்குகள், அரசு மரியாதையுடன் இன்று நடைபெற்றது.
டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். டெல்லியில் உள்ள கவுட்டில்யா மார்க் பகுதியில் உள்ள அர்ஜன் சிங் வீட்டுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை அர்ஜன் சிங்கின் இறுதி சடங்குகள் அவரது வீட்டில் நடைபெற்றன. அதன்பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அவரது உடல் ஏற்றப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதைதொடர்ந்து, அரசு மரியாதையுடன் பிரார் சதுக்கத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
1965-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய விமானப்படையை வழிநடத்திய வீரரான அர்ஜன்சிங் 5 நட்சத்திர ரேங்க் கொண்ட இந்தியாவின் மூத்த அதிகாரிகளில் ஒன்றாக நாட்டுக்கு அரிய சேவையாற்றியுள்ளார்.
இந்திய விமான படை முன்னாள் தளபதி மார்ஷல் அர்ஜன் சிங்கின் உடலுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படைத் தளபதி உள்ளிட்டோர்அஞ்சலி செலுத்தினார்.
இந்திய விமானப் படை தலைவர் பிஎஸ் தானோ மற்றும் கடற்படை ஊழியர்கள் தலைமை சுனில் லன்பா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார். மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் மார்ஷல் அர்ஜன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், டெல்லி ராணுவ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.