புதிதாக அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்கள், குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் இதுவரை இந்தச் சட்டம் மீது வன்முறை சீற்றத்தைக் கண்டுள்ளன.
முன்னதாக இந்த சட்டத்தை எதிர்த்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் காவல்துறையினருடன் மோதல் நடத்தியதில், இரு தரப்பு மக்களும் காயமடைந்ததை அடுத்து டெல்லியில் நடந்த போராட்டம் கசப்பாக மாறியது. சீலம்பூர், ஜாப்ராபாத் போன்ற பகுதிகளில் வசிப்பவர்களும் வீதிகளில் இறங்கி குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுகளையில் கைது செய்யப்பட்டனர். மேலும் பொது சொத்துக்களை சூறையாடியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
இதற்கிடையில், வியாழக்கிழமை, திருத்தப்பட்ட சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இடதுசாரி கட்சிகள் முழு அடைப்பு அறிவித்துள்ளன, மேலும் மும்பை மற்றும் பிற இடங்களில் எதிர்ப்பு அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் செங்கோட்டைக்கு அருகே 144-வது பிரிவு விதிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் டி. ராஜாவை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சிதாராம் யச்சூரி, பிரகாஷ் கரத், பிரிந்தா கரத் ஆகியோரும் காவல்துறையினரால் இடை நிறுத்தப்பட்டனர்.
அதேப்போல் காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் டெல்லியின், மண்டி மாளிகையில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும், செங்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தில் பங்கேற்க விடாமல் அவரை காவல்துறையினர் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, தலைநகர் டெல்லியில் மெட்ரோ மற்றும் மொபைல் இணைய சேவைகள் தடை செய்யப்படுள்ளது.
டெல்லி காவல்துறைக்கு வழங்கப்பட்ட இன்டெல் உள்ளீட்டின் படி, நகரத்தில் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்ட 12 இடங்கள் (ஜந்தர் மந்தர், ஜாமியா, பாராளுமன்ற வீதிக்கு அருகில், செங்கோட்டை, மண்டி மாளிகை முதல் ஜந்தர் மந்தர், ராஜ் காட் மற்றும் கலிண்டி குஞ்ச் ஆகியவை சில இடங்கள்.) பதற்றத்துடன் காணப்படுவதால் மொட்ரோ சேவை மற்றும் சாலை போக்குவரத்து தடை பட்டுள்ளது.
மொபைல் சேவைகளை பொறுத்தவரையில் வோடபோன் நிறுவனம், தங்கள் நெட்வொர்களில் தடை ஏற்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டது. ஏர்டெல் நிறுவன எண்களில் அழைப்பு, SMS வசதி மட்டும் செயல்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளது.