சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் இன்று காலையில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Firecracker Factory Explosion : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் இன்று காலையில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE), துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் இரவு நேரத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் உள்ளூர் மக்கள் மிக அதிக அச்சத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
பெஷாவரின் திர் காலனியில் ஒரு செமினரிக்குள் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர், 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று கைபர் பக்துன்க்வா காவல்துறைத் தலைவர் டாக்டர் சனாவுல்லா அப்பாஸி தெரிவித்தார்.
ஆப்கான் தலைநகர் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என சந்தேகிகப்படுகிறது!
ஜார்கண்ட் மாநிலம் குமார்துபி பகுதியில் தனியார் பட்டாசு உற்பத்தி ஆலையத்தில் இன்று காலை வெடிமருத்து சேமிப்பு கிடங்கு பகுதியில் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
பட்டாசுகள் இருக்கும் பகுதியிலும் தீ பரவியதால் அப்பகுதியில் பெரும் சப்தத்துடன் வெடி குண்டுகள் வெடிப்பது போல இருந்துள்ளது. இதனையடுத்து, தகவலறிந்து 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயற்சித்தனர்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர்.
இதுதவிர, ஐஎஸ் தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று காலை தலைநகர் டமாஸ்கஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மிகப்பெரும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி துறையூர் அருகே நடந்த வெடி விபத்தில், 19 பேர் உயிர் இழந்த வழக்கில், வெடிமருந்து தொழிற்சாலையின் இயக்குநர் உட்பட, ஐந்து பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
சீனாவின் வடமேற்கு பகுதியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 14 பேர் பலியாகினர் மேலும் 145 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் ஷான்ஜி மாகாணாம் ஜின்மின் நகரில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் குண்டு வெடித்தது. அதன் அருகில் உள்ள கட்டிடங்களும் கடுமையாக சேதம் அடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை தொடங்கினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்பு பணியும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
கிர்கிஸ்தானில் உள்ள சீன தூதரகம் முன்பு குண்டு வெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் பலர் காயமுற்ற நிலையில் ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை கிடைத்த தகவல் படி ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிகிறது. 3 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
பிஸ்கேக் பகுதியில் சீன தூதரகம் உள்ளது. தூதரகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து குண்டு வெடித்ததாக கூறப்படுகின்றனர். பலியானவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவ இடத்தில் பாதுகாப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.