மும்பையில் "கனமழை முதல் மிக அதிக மழை பெய்யும்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
மும்பையில் பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இங்கு கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மும்பை, தானே, நாசிக் உள்ளிட்ட பகுதிகளீல் கனமழை பெய்து வருவதால் பெரும் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மும்பை சென்ரலில் இருந்து துறைமுகம் செல்லும் வழிதடத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் ரயில்வே சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
சென்னை விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில், டெக்கான் கியூன் மற்றும் கொனார்க் விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. அதே போல் மும்பை விமான நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய அனைத்து விமானங்களும் மழையின் காரணமாக தாமதமாக வந்து செல்வதால் பொது மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கனமழை காரணமாக மராட்டிய மாநிலத்தில் பல அணைகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது, மித்தி, பார்வி, உல்காஸ் போன்ற ஆறுகளில் உள்ள நீர் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.
குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு வந்ததையடுத்து தானே மாவட்டத்தின் கதவலி பகுதியில் வெள்ளத்தில் சிக்கி இருந்த 10 குழந்தைகள் உட்பட 58 பேரை விமான படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நவி மும்பை பகுதியில் 250 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக கடலின் சீற்றம் அதிகம் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருவதால் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
Weather Forecast by I.M.D at 02:00 Hours - INTERMITENT RAIN OR SHOWERS WITH HEAVY FALLS AT ISOLATED PLACES IN CITY AND SUBURBS.@IMDWeather #Monsoon2019 #MCGMUpdates #MumbaiRains #SafeMonsoon pic.twitter.com/vKIA4DnWMi
— माझी Mumbai, आपली BMC (@mybmc) August 6, 2019
மேலும், மகாராஷ்டிரா தலைநகரம் புதன்கிழமை மற்றொரு ஈரமான எழுத்துப்பிழைக்கு சாட்சியாக உள்ளது. மும்பையில் "கனமழை முதல் மிக அதிக மழை பெய்யும்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ரத்னகிரி, சிந்துதுர்க், புனே, கோலாப்பூர் மற்றும் சதாரா மாவட்டங்களில் சில இடங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.