ராஜஸ்தானில் தற்போது பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடை பெற்று வருகிறது. அங்கு வசுந்தரா ராஜே தற்போது முதல்வராக செயல் பட்டு வருகிறார்.
அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே நாட்டு பற்று வளரவும், தேசியவாதத்தை அணுகுவதற்கான புதிய விதி முறையை பா.ஜ.க தலைமையிலான ராஜஸ்தான் முதல்வர் பிறப்பித்துள்ளார்.
கிட்டத்தட்ட 800 விடுதிகளின் மாணவர்கள் தினசரி தேசிய கீதத்தை காலை 7 மணிக்கு பிரார்த்தனைகளோடு பாடியிருக்க வேண்டும். என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் நகர குடிமக்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும் காலையில் தேசிய கீதத்தை பாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த உத்தரவானது ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் அன்று நடைமுறைக்கு வந்தது. இது தொடர்பாக மேலும், துறைமுகங்கள் இயக்குனர் டாக்டர் சமித் ஷர்மா பல குடியிருப்புப் பள்ளிகள் ஏற்கனவே, இந்த நடைமுறைகளை பின்பற்றி வருவதாகவும் கூறினார்.
மேலும், அக்டோபர் மாத முதல் ஜெய்ப்பூர் மாநகராட்சியின் உள்ள அனைத்து ஊழியர்களும் காலையில் தேசிய கீதத்தை, மாலையில் வாந்தே மாதாரம் பாட வேண்டும் என நகர மேயர் அசோக் கேட்டு கொண்டுள்ளார். மேலும்,இது தொடர்பாக நகர மேயர் அசோக் லாஹோட்டி, 'பாடுவதற்கு விரும்பாதவர்கள் பாக்கிஸ்தானுக்கு செல்லலாம்' என்வும், வலியுறுத்தியுள்ளார்.