கெஜ்ரிவாலை கிண்டலடித்து பேசிய வீடியோ வைரல்

Last Updated : Jul 20, 2016, 10:50 AM IST
கெஜ்ரிவாலை கிண்டலடித்து பேசிய வீடியோ வைரல் title=

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் டெல்லி மேல்-சபை எம்.பி-யாக நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கிண்டலடித்து 2014-ம் ஆண்டு பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

* அரசியலில் குதிக்க மாட்டேன் என கெஜ்ரிவால் முதலில் கூறினார், ஆனால் அரசியலில் இறங்கினார். 
* தனக்கு பாதுகாப்பு எதுவும் வேண்டாம் என்றார், ஆனால் இசட் பிரிவு பாதுகாப்பை பெற்றார். 
* அரசு பங்களா வேண்டாம் என்றார், ஆனால் பிறகு பெற்றுக்கொண்டார். 
* தன்னுடைய இருமல் பிரச்சினையை தீர்க்க முடியாதவர், எப்படி டெல்லி அரசின் பிரச்சினையை தீர்க்க முடியும் என நவ்ஜோத் சிங் சித்து அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

* மேலும் மற்றொரு வீடியோவில்:- கெஜ்ரிவால் எதற்காகவும், எதையும் விட்டு விலக தயங்க மாட்டார். அரசு பணியை துறந்தார். அன்னா ஹசாரேவை விட்டு பிரிந்தார். அவர்     எப்படி மக்களுடன் இருக்கப்போகிறார் என்று கூறியுள்ளார்.

இந்த இரண்டு வீடியோவும் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Trending News