FAST-45: ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்...

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக, ஒரு நிமிட வாசிப்பிற்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. 

Written by - | Last Updated : Dec 22, 2019, 07:33 AM IST
FAST-45: ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்... title=

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக, ஒரு நிமிட வாசிப்பிற்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. 

1. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  சென்னை-திருச்சிக்கு சிறப்பு கட்டண ரயில்...
சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 23, 25 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06025) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

திருச்சி-சென்னை மார்க்கத்தில் இருந்து டிசம்பர் 22, 24 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06026) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
 
2. சென்னை-எர்ணாகுளம் கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 22-ஆம் தேதி இரவு 7 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82631) புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை சென்றடையும் என ரயில்வே அறிவிப்பு...

சென்னையில் இருந்து கொச்சுவேலிக்கும் சிறப்பு ரயில் இயக்கம்... சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது...  

3.குழந்தைகளுக்காக கிறிஸ்துமஸ் தாத்தாவான கோஹ்லி...
கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமணிந்த கோஹ்லி, கோல்கட்டாவில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றுக்கு சர்ப்ரைஸ் விசிட் செய்து  அங்குள்ள குழந்தைகளுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பரிசுப் பொருட்கள் வழங்கி, குழந்தைகளை மகிழ்விப்பு...

4. ஆல்பபெட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு 2020ல் வருமானம் ரூ.2788 கோடியாம்...
அடுத்த ஆண்டு ஜூன் முதல் சம்பளமாக 2 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.14.5 கோடி) உள்பட பல்வேறு வழிகள் மூலம் ரூ.2788 கோடி ரூபாய் கிடைக்கும் என மதிப்பீடு...

5. குடியுரிமை சட்டத்துக்கு எதிரான தி.மு.க.பேரணி... மக்கள் நீதி மய்யம் பங்கேற்காதென அதன் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு...

6. விழுப்புரம் அருகே கானை குப்பத்தில் ஒரே இரவில் 80க்கும் மேற்பட்ட பன்றிகளை, மர்மகும்பல் திருடி சென்றதால் பரபரப்பு...

7. காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் பாம்பை வைத்து வித்தை காட்டி ஏமாற்றிய பெண் சாமியார் கபிலா கைது... பாம்புகளை வாடகைக்கு வாங்கி பூஜையில் பயன்படுத்தி அடாவடி வசூல்

8. மகாத்மா காந்தியடிகளின் புகழை பரப்ப அமெரிக்கா நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்...
காந்தியடிகளுடன், மார்டின் லுாதர் கிங் ஜூனியர் ஆகியோரின் புகழை பரப்புவதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கக்கோரி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா அறிமுகம்...

9 .குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடிகர் ரஜினிகாந்த் ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா என அவருடைய நிலைப்பாடு தெளிவாக இல்லை என மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கருத்து...
 
10. பாஸ்டேக்’ கட்டண முறையில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்... சரி செய்யுமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

11. தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் நாளை வெளியீடு... ஜனவரியில் நான்கு சிறப்பு முகாம்கள்

12. நடிகர் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தனது அரசியல் அறிவிப்பை தெரிவிப்பார்...
காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தகவல்...

13. ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டும் சர்வதேச சுற்றுலா பயணிகளை கவர புதிய திட்டம்... குன்னூர் ரயில் நிலையத்தில் பாரம்பரிய இன்ஜினில் புகைப்படம் எடுக்கும் , 'லோக்கோ பைலட்' புதிய திட்டம் அறிமுகம்...

14. குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் கை கோத்துள்ளதால் பா.ஜ.க., தலைவர்கள் அதிர்ச்சி...
போராட்டங்கள் தொடர்ந்து நடந்தால் என்னவாகும் என கவலை...

15. மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராசில் உள்ள சிறையில், இரண்டு பிரிவினருக்கு இடையே நிகழ்ந்த வன்முறை மோதலில் 18 கைதிகள் கொலை.. 16 பேர் காயம்...

16. குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வன்முறையாளர்கள் மீது யோகி அரசு கிடுக்குப்பிடி… 705 பேர் கைது… யாரும் தப்பமுடியாது என டிஜிபி அறிவிப்பு

17. உத்தரப்பிரதேசத்தின் ராம்பூரில் வன்முறை… போலீஸ் மீது கல்வீச்சு… 6 பேர் காயம்… ஒருவர் பலி

18. கோரக்பூரில் வன்முறையாளர்கள் படங்களை உத்தரப்பிரதேச போலீஸார் வெளியீடு… தகவல் தரக்கோரிக்கை… லக்னௌவ் கலவரத்தில் வங்கதேசத்தினர் தொடர்பு அம்பலம்

19. என்ஆர்சி மற்றும் குடியுரிமை சட்டம் பற்றி 10 விழிப்புணர்வு பிரசாரம் செய்ய பாஜக முடிவு… உண்மையை விளக்க நாடு முழுவதும் ஆயிரம் பேரணிகள், 250 செய்தியாளர்கள் கூட்டத்துக்கும் ஏற்பாடு

20. நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக ஊர்வலம்… இந்த சட்டம் நாட்டுக்கு அவசியம் என தில்லியில் பிரசாரம்… ஆதரவாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உரை

21. குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு பாக் மீண்டும் ஆதரவு… இந்தியாவை ஹிந்து தேசமாக மாற்ற மோடி அரசு விரும்புவதாக பிரதமர் இம்ரான்கான் டுவிட்...

22. உன்னாவ் பாலியல் வழக்கில்  பாதிக்கப்பட்ட பெண் கான்பூர் மருத்துவமனையில் மரணம்… எஸ்பி அலுவலகம் முன்பாக டிசம்பர் 16ல் தீக்குளித்தவர் ஐந்து நாள்களுக்குப்பின் சிகிச்சை பலனின்றி இறந்தார்...

23. உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் இரு கிராமத்தினர் இடையே பயங்கர மோதல்… தாக்குதலில் 12 பேர் படுகாயம்

24. யமுனை ஆணையத்தின் 66வது கூட்டத்தில் முக்கிய முடிவுகள்… ஜேபி சர்வதேச விளையாட்டுக்கான 1000 ஹெக்டேர் ஒதுக்கீடு ரத்து… பார்முலா ஒன் ரேஸ் களம் அமைக்க திட்டமிடப்பட்டது

25. தில்லி மற்றும் நொய்டாவில் சிற்ப உற்சவம் தொடக்கம்… நாடு முழுவதும் இருந்து பல்வேறு கைவினைஞர்கள் பங்கேற்பு

26. உத்தரப்பிரதேச வன்முறைகளுக்கு அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா கண்டனம்… அரசியல் லாபத்துக்காக இளைஞர்களை தூண்டிவிடுவதாக எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல்

27. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ராஜ்காட்டில் பிரியங்கா காந்தி நாளை தர்ணா… காங்கிரஸ் சார்பில் 4 மணிநேர சத்தியாகிரகம்

28. லக்னோ கலவரத்தில் மால்டாவை சேர்ந்த 6 பேருக்கு தொடர்பு அம்பலம்… அவர்களது படத்தை வெளியிட்டது உத்தரப்பிரதேச காவல்துறை

29. மீரட் கலவரத்தில் தில்லியைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு என போலீஸார் அறிவிப்பு… 4 நாள் திட்டமிட்ட சதி எனத் தகவல்

30. பிகாரின் தானாபூரில் கோஷ்டி மோதல்… கல்வீச்சில் பலர் காயம்… காயமடைந்தவர்களை சந்தித்து ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆறுதல் 

31. குடியுரிமை சட்டம் குறித்து என்டிஏ அவசரக்கூட்டத்தை நடத்த பிரதமருக்கு ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்… பிரச்னையை பேசித்தீர்க்க யோசனை

32. சத்தீஸ்கர் உள்ளாட்சி தேர்தல் நிறைவு… 151 அமைப்புகளுக்கு 66 சதவீத வாக்குப்பதிவு

33. ஜபல்பூரில் பதற்றத்தை தணிக்க அரசு நடவடிக்கை… மாவட்ட உயர் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் அவசர ஆலோசனை

34. மகாராஷ்டிரத்தில் கள்ளச்சந்தையில் யூரியா விற்பனை… யூரியா கடத்தல் லாரியை 12 கிலோ மீட்டருக்கு அதிகாரிகள் விரட்டி பிடித்து 200 மூட்டைகள் பறிமுதல்

35. இந்தூரில் கலப்பட நெய் விற்பனை… உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் 105 கிலோ பறிமுதல்… கலப்பட விற்பனையாளர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

36. அமைச்சர் அமீத் ஷா பாசிஸவாதி போல பேசுவதாக  ராஜஸ்தான் முதல்வர் கெல்லாட் ஆவேசம்…

37. அஸாமில் என்ஆர்சி தோல்வியடைந்தது ஏன் என்றும் கேள்வி

38. என்ஆர்சி மற்றும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஜெய்ப்பூரில் அமைதி பேரணி… அணிதிரளுமாறு சமூக ஆர்வலர்களுக்கு ராஜஸ்தான் முதல்வர் கெல்லாட் அழைப்பு

39. மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் காரணமாக இன்று ஜெய்ப்பூரில் இயல்புநிலை பாதிக்க வாய்ப்பு… இன்டர்நெட் சேவை முடக்கம்… மெட்ரோ ரயில்கள் நிறுத்தம்

40. மாவட்ட உள்ளாட்சி பதவி ஒதுக்கீடுக்கு லாட்டரி குலுக்கல்...ஜெய்ப்பூர்,ஜோத்பூர் உள்பட 8 மாவட்டங்கள் பெண்களுக்கு...

41. ராஜஸ்தான் அரசுத் தலைமைச் செயலகத்தில் புகையிலை பொருட்களுக்கு தடை…  100 மீட்டர் சுற்றளவில் பயன்படுத்த வேண்டாமென ஊழியர்களுக்கு அட்வைஸ்

42. பானிபட் திரைப்படத்தில் மகாராஜ் சுராஜ்மால் பாத்திர சர்ச்சை… படக்குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

43. உதய்ப்பூரில் சிற்பக்கலை உற்சவம் 2019 ஐ தொடங்கி வைத்தார் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா… பல்வேறு மாநிலங்களிலிருந்து இளம் கலைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

44. தில்லி ராமலீலை மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டம்… பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமீத் ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு. பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்… 

45. குடியுரிமைசட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பலியானவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு… தில்லி வக்பு வாரிய நிர்வாகி அமானாதுல்லா கான் அறிவிப்பு.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News