டெல்லியில் நாளை முதல் இரவு ஊரடங்கு!

டெல்லியில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 26, 2021, 08:57 PM IST
டெல்லியில் நாளை முதல் இரவு ஊரடங்கு! title=

கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.  இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா இரண்டாம் அலை முடிவடைந்து தற்போது பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தொற்றான ஓமிக்ரான் தற்போது இந்தியாவிலும் அதிகரிக்கிறது. 

ALSO READ | ஒமிக்ரான் வைரஸ்: தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு 100% ஆபத்து உறுதி!

அதுமட்டுமின்றி கொரோனா பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  டெல்லியில் 290 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  அங்கு 922 பேருக்கு புதிதாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  4295 பேர் ஏற்கனவே சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.  குஜராத்திலும் 117 பேருக்கு நோய் தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது. 

lockdown

தமிழகத்திற்கு அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் 348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் புதிதாக 610 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.  ஓமிக்ரான் பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கண்டிப்பான முறையில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.  மேலும் இரவு நேர ஊரடங்கு தேவையான மாநிலங்கள் அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.  அதனை தொடர்ந்து தற்போது ஒவ்வொரு மாநிலங்களாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றனர்.  தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

ALSO READ | ’ஒமிக்ரானை எதிர்கொள்ள ஆயத்தமாவோம்’ பிரதமர் மோடி உரை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News