Video: முதல்வரை விரட்டிய குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்கள்

முசாபர்பூருக்கு சென்ற முதல்வர் நிதீஷ் குமாரை "திரும்பிச் செல்" என்று கண்ணீர் விட்டபடியே ஆவேசமா முழக்கமிட்டு விரட்டிய குழந்தைகளை இழந்த பெற்றோர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 18, 2019, 04:11 PM IST
Video: முதல்வரை விரட்டிய குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்கள் title=

முசாபர்பூர்: பீகார் முசாபர்பூரில் மூளை காய்ச்சல் (Advanced Encryption Standard) காரணமாக 126-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர். அதே நேரத்தில், மக்களிடையே இந்த காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு இல்லாததால் வேகமாக பரவுகிறது என்றும், அதனால் தான் உயிர் பலி அதிகரித்து வருகிறது என சமூக சேவகர்கள் கூறியுள்ளனர். 

இந்த நாட்களில் முசாபர்பூரில், முழு மருத்துவமனையும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளது. அதே நேரத்தில், அங்கு இறந்த குழந்தைகளின் உடல்களும் இருக்கிறது. கடந்த இரண்டு வாரமாக முசாபர்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் அழுகையின் குரல் தான் கேட்க முடிந்தது. இந்த காய்ச்சல் குறித்து ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுகள் எடுக்கவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இங்கு பலியாகும் ஒவ்வொரு உயிருக்கும் முக்கிய காரணம் மத்திய அரசும், மாநில அரசும் தான் பொறுப்பேற்க்க வேண்டும் என மக்கள் மற்றும் சமூக சேவகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என்றும், பலியான குழந்தைகளின் குடும்பத்தாருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, முசாபர்பூரில் உள்ள எஸ்.கே.எஸ்.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள குழந்தைகளை பார்வையிட, முதல்வர் நிதீஷ் குமார் வந்தார். ஆனால் அங்கு முதல்வர் நிதீஷ் குமாருக்கு எதிராக கோஷமிட்டு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். "திரும்பிச் செல்" என்று கண்ணீர் விட்ட படியே ஆவேசமா முழக்கமிட்டு விரட்டிய குழந்தைகளை இழந்த பெற்றோர்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது. மக்களின் எதிர்ப்பால் திரும்பி சென்றார் முதல்வர் நிதிஷ்குமார்.

 

Trending News