மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ.86 உயர்வு

Last Updated : Mar 1, 2017, 01:59 PM IST
மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ.86 உயர்வு title=

மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 86 ரூபாய் உயர்த்தி பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவு.

இது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வை கணக்கில் கொண்டு, வீடுகளில் உபயோகிக்கப்படும் மானியமில்லா சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ.86 அதிகரிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வருகிறது. அதாவது இந்த விலை உயர்வானது இன்று(மார்ச்1) முதல் அமலுக்கு வருகிறது. மானியத்துடன் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கேஸ் சிலிண்டர்கள் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

 

 

தற்போதைய நிலவரப்படி,மானியம் உள்ள கேஸ் சிலிண்டர் விலையானது 737 ரூபாயாக உள்ளது. இதில் மத்திய அரசின் மானியமாக 303 ரூபாய் ,பொதுமக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. எனவே மானியம் உள்ள கேஸ் சிலிண்டர்களின் விலை 434 ரூபாயாகவே உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சர்வதேச சந்தையின் விலை நிலவரப்படி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News