உத்தர கர்நாடகா விவகாரம்: முழு கவனம் செலுத்தப்படும் முதல்வர் குமாரசாமி

கர்நாடக மாநிலத்தில் வட பகுதிகள் வளர்சிக்கு தனி கவனம் செலுத்தப்படும் என அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 31, 2018, 08:08 PM IST
உத்தர கர்நாடகா விவகாரம்: முழு கவனம் செலுத்தப்படும் முதல்வர் குமாரசாமி title=

தென் கர்நாடகா வளமாக இருக்கிறது என்றும், வட கர்நாடக கடும் வறட்சியால் பாதிக்கபட்டு உள்ளது. எந்த அரசு ஆட்சிக்கு வாந்தாலும் வட கர்நாடக மாவட்டங்களை புறகணிக்கிறது என நீண்ட நாட்களாகவே வட கர்நாடக மாவட்டகளை சேர்ந்த பிரநிதிகள் கூறிவந்தனர். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் குமாரசாமி தலைமையிலான அரசு இந்த மாதம்(ஜூலை 5) பட்ஜெட் தாக்கல் செய்தது. 

கர்நாடக அரசு பட்ஜெட் தாக்கல் செய்ததை அடுத்து, குமாரசாமி தலைமையிலான அரசு ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான அரசாக மட்டுமே செயல்படுகிறது. அவர்கள் வெற்றி பெற்ற மாவட்டங்களுக்கு மட்டும் அதிகமாக நிதி ஒதுக்கப்படுகிறது என்றும், அனைத்து நலத்திட்ட உதவிகளும் அங்கே தான் செல்கிறது என்றும் குற்றச்சாற்று எழுந்தது. ஏற்கனவே வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ள வட கர்நாடகாவை சேர்ந்த மாவட்டங்களின் தொழில்வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. எனவே வட கர்நாடக சேர்ந்த 13 மாவட்டங்களை ஒன்றாக இணைத்து தனி மாநில அந்தஸ்து கேட்கிறோம். அதற்காக வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வட கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என தனி மாநில அமைப்பின் தலைவர் சோமசேகர் கொடாம்பரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமி கூறியதாவது:- 

தற்போது கர்நாடகாவில் மக்கள் அரசுக்கு ஆதரவாக தான் இருக்கிறார்கள். அரசு அனைவருக்கும் பொதுவாக தான் செயல்படுகிறது. அனைத்து தரப்பினரும் பயன்பெரும் வகையில் தான் திட்டங்கள் தீட்டப்படுகிறது. ஆனால் மீடியாக்கள் தான் நான் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் முதல்வர் என்று காட்டிவருகிறது. எங்களை பிடிக்காத சில அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்து தனி மாநில கோரிக்கை வைக்கின்றனர். அதற்க்கு மீடியாக்களும் துணை போகிறது. கர்நாடகாவில் தனி மாநில கோரிக்கை தொடர்பான போராட்டங்கள் நடைபெற்றால் அதற்கு முக்கிய காரணம் மீடியாக்கள் தான் என கோவமாக கூறினார்.

தற்போது வட கர்நாடக மாவட்டங்கள் முழுவதும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். அதற்க்கான தனி குழு அமைக்கப்படும். வட கர்நாடக மாவட்டங்களை வளர்ச்சி நிலைக்கு கொண்டு வருவது என்னுடைய கடமை. அதில் முழுகவனம் செலுத்தப்படும்.

Trending News