கேரளாவில் CPI(M) பதாகையில், வடக்கு கொரிய தலைவர் கிம் ஜொங்-உன் புகைப்படம் இடம்பெற்றுள்ள சம்பவம் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் நெடுங்கண்டம் எனும் இடத்தில், டிசம்பர் 16-17 தேதிகளில் நடைப்பெற்ற சிபிஐ(எம்) கட்சி கூட்டத்தில் வைக்கப்பட்ட பதாகையில் தான் இவரின் படம் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து பா.ஜ.க பேச்சாளர் திரு. சம்பித் பாத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, வடக்கு கொரிய தலைவர் கிம் ஜோங் கேரளாவின் சிபிஐ(எம்) கட்சியில் இடம்பிடித்தார் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கேரளாவை அவர்கள் படுகொலை பூமியாக மாற்றி வருகின்றனர் என உறுதியாகிறது என குறிப்பிட்டுள்ளார்.
CPI (M) poster with North Korean leader Kim Jong-un's picture seen in Kerala's Nedumkandam pic.twitter.com/W26vQTE7d1
— ANI (@ANI) December 17, 2017
வட கொரிய தலைவர் கிம் ஜோங், தனது சர்வாதிகார ஆட்சியால் உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்பட்டவர்.
சமீபத்தில், வடகொரியாவால் நடத்தப்பட்ட அணுசக்தி சோதனை பற்றிய இந்தியா கவலை தெரிவித்திருந்ததுடன், அத்தகைய நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது!