பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை தற்போது திருநங்கைகளுக்கு பயன்தரும் விதத்தில் புதிய திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
வங்கிக் கணக்குகளில் பான் கார்டு இல்லாத காரணத்தால் திருநங்கைகள் வருமான வரியை செலுத்த முடியாத நிலை உள்ளது. அவர்களும் பயன்கொள்ளும் வகையில் பான் கார்டு கோரும் விண்ணப்பத்தில் திருநங்கைகள் தங்களது பாலினத்தைக் குறிப்பிட தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகளுக்கு அடையாளமாக ஆதார் கார்டு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கு தீர்வு காணும் வகையில், பான் விண்ணப்பத்தில் ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம் சேர்க்கப்படுகிறது. பான் கார்டில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டால், ஆதாருடன் பான் கார்டை இணைப்பதில் திருநங்கைகள் சந்தித்த பிரச்னை தீர்வுக்கு வரும்.