உத்தரப்பிரதேசம் ஆக்ராவில் பெண் ஒருவரை குரங்கு கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மொகல்லா கச்சேரா பகுதியில் பிறந்து 12 நாட்களே ஆன குழந்தையை குரங்கு தக்கியத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மற்றொரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள காகிரனுல் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய பூரான்தேவி என்ற பெண் கடந்த செவ்வாய்கிழமை வயல் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் வந்த வழியில் இருந்த குரங்குகள் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி கடித்துள்ளது. இந்த தாக்குதலில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
இந்த கொடூர சம்பவத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், குரங்குகள் கூட்டத்தை விரட்டியடித்துவிட்டு பூரான் தேவியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தசம்பவம் பக்குதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. ஆக்ராவில் குரங்குகள் கூட்டம் அதிகரித்துள்ளநிலையில், மக்கள் இடையே பெரும் பீதி நிலவி வருகிறது. இந்த சம்பவம்குறித்து கவால்துரையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.