Unemployment Rate: தொற்றுநோய் காரணமாக, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வேலையின்மை விகிதம் இப்போது சிறிது குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ர்டன. தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) நடத்திய ஒரு கணக்கெடுப்பில், வேலையின்மை விகிதம் ஜூலை-செப்டம்பர் 2020 13.3% ஆக அதிகரித்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 8.4% ஆக இருந்தது. இருப்பினும், காலாண்டு அடிப்படையில் பார்க்கும் போது நிலைமையில் முன்னேற்றம் உள்ளது
வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை வேலையின்மை விகிதம் என்று அழைக்கப்படுகிறது. NSO வெளியிட்ட எட்டாவது தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பின்படி, வேலையின்மை விகிதம், 2020 ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 20.9% என்ற அளவை எட்டியது. ஜூலை-செப்டம்பர் மாதங்களில் இது 13.3%குறைந்துள்ளது. அதாவது இது காலாண்டு அடிப்படையில் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது. NSO கணக்கெடுப்பின்படி, 2020 செப்டம்பர் காலாண்டில் தொழிலாளரின் பங்கேற்பு விகிதம் 37 சதவீதமாக இருந்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டில் 36.8% ஆக இருந்தது. 2020 ஏப்ரல்-ஜூன் மாதங்களில், இந்த விகிதம் 35.9%ஆக இருந்தது.
ALSO READ | பிரதம மந்திரி ஏழை நல்வாழ்வு உணவு திட்ட பயனாளிகளுடன் இன்று பிரதமர் உரையாடல்
தொழிலாளர் ஆற்றல் (Labour Force) என்பது பொருள் மற்றும் சேவைகளின் உற்பத்திக்கான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் அல்லது வழங்கும் மக்கள் தொகையின் ஒரு பகுதியாகும். இது, 'வேலைவாய்ப்பு' மற்றும் 'வேலையில்லாத' நபர்களை உள்ளடக்கியது. PLFS இதுவரை டிசம்பர் 2018, மார்ச் 2019, ஜூன் 2019, செப்டம்பர் 2019, டிசம்பர் 2019, மார்ச் 2020 மற்றும் ஜூன் 2020 ஆகிய காலகட்டத்திற்கான 7 காலாண்டு கணக்கெடுப்புகளை வெளியிட்டுள்ளது. சமீபத்திய அறிக்கை 8 வது கணக்கெடுப்பு ஆகும்.
தொழிலாளர் கணக்கெடுப்பு என்றால் என்ன
NSO 2017 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கணக்கிடப்படும் தொழிலாளர் படை கணக்கெடுப்பை (Periodic Labour Force Survey -PLFS) தொடங்கியது. கணக்கெடுப்பின் அடிப்படையில் காலாண்டிற்கான கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதில், வேலையின்மை விகிதம், தொழிலாளர் மக்கள் தொகை விகிதம், தொழிலாளர் பங்கேற்பு விகிதம், தற்போதைய வாராந்திர நிலை போன்ற தொழிலாளர் ஆற்றல் குறிகாட்டிகளின் மதிப்பீடுகள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய வாராந்திர நிலை (CWS) கணக்கெடுப்பு காலத்தில் 7 நாட்களுக்கு குறுகிய காலத்தில் வேலையின்மை பற்றிய சராசரி படத்தை வழங்குகிறது. CWS இல், ஒரு நபர் ஒரு வாரத்தில் 1 மணிநேரம் கூட வேலை செய்யவில்லை என்றால் அவர் வேலையில்லாதவராக கருதப்படுவார்.
ALSO READ: Ration Card Apply: புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR