NTA Chief Suboth Kumar Singh Sacked: மருத்துவக் கல்விக்கான நுழைத்தேர்வான NEET, ஆசிரியர் போட்டித் தேர்வான UGC-NET உள்ளிட்ட முக்கிய தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகளும், குளறுபடிகளும் நடைபெறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்த முறைகேடுகளால் பல லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வும், எதிர்காலமும் கேள்விக்குள்ளாகும் அபாயம் உள்ள நிலையில் இதுகுறித்து விரைந்து செயல்பட தொடர்ந்து மத்திய அரசுக்கு புற அழுத்தம் கொடுக்கப்பட்டது.
குறிப்பாக, NET தேர்வை மத்திய அரசு தற்போது ஒத்திவைத்துள்ள நிலையில், அடுத்த அதிரடியாக தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைமைப் பொறுப்பில் இருந்த சுபோத் குமார் மீது மத்திய அரசின் நடவடிக்கை பாய்ந்துள்ளது. அவரை பதவியில் இருந்து தூக்கியெறிந்துள்ள மத்திய அரசு, அவரை பணியாளர் மற்றும் பயிற்சி துறையில் கட்டாயக் காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளனர்.
பிரதமரின் ஆலோசகருக்கு நெருக்கமானவர்
இதை தொடர்ந்து தேசிய தேர்வு முகமைக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சிங் கரோலா புதிய பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய தேர்வு முகமை நாடு முழுவதும் CUET, JEE (Main), NEET, UGC-NET ஆகிய தேர்வுகளை நடத்தும். மேலும் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதீப் சிங் கரோலா 1985 ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். மேலும் இவர் பிரதமரின் ஆலோசகரான அமித் கரேவுக்கு மிகவும் நெருக்கமானவர். பிரதீப் சிங் முன்னர் விமான போக்குவரத்துத் துறையின் செயலாளராக இருந்தார்.
NEET PG ஒத்திவைப்பு
முன்னதாக, நீட் தேர்வின் வினாத்தாள்கள் தேர்வுக்கு முந்தைய நாளே சில மாநிலங்களில் மட்டும் கசிந்திவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நாடு முழுவதும் இதற்கு கடும் கண்டன குரல் எழுப்பப்பட்டது. நாட்டின் பல இடங்களில் போராட்டம் வெடித்தது. ஜூன் 23ஆம் தேதியான இன்று NEET PG 2024 தேர்வு நடைபெற இருந்தது, அதுவும் தற்போதைய சூழலில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
NEET UG குளறுபடிகள்
குறிப்பாக, NEET UG தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான போது மொத்தம் 67 தேர்வாளர்கள் 720க்கு 720 மதிப்பெண்களை எடுத்ததன் மூலம் தொடர்ந்து இந்த தேர்வும் இன்னும் தீவிர கட்டுப்பாட்டுகுள் வந்தது. மேலும் சுமார் 1500க்கும் மேலான மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, போராட்டத்திற்கு தூண்டியது. இதுசார்ந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை தேசிய தேர்வு முகமை கையாளும் விதத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்தது.
UGC-NET ஒத்திவைப்பு
கடந்த ஜூன் 18ஆம் தேதி UGC-NET தேர்வு 317 நகரங்களில் நடைபெற இருந்தது. சுமார் 9 லட்சம் தேர்வாளர்கள் அந்த தேர்வை எழுத காத்திருந்தனர். இருப்பினும், அந்த தேர்வின் வினாத்தாள் Dark Net-ல் லீக்கானதாக கூறப்படுகிறது. இதனால் இந்த தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், இது தேசிய தேர்வு முகமையின் அமைப்பு சார்ந்த தோல்வி என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.
உயர் மட்ட குழு அமைப்பு
தேசிய தேர்வு முகமையின் இந்த குளறுபடிகளை விசாரிக்க முன்னாள் இஸ்ரா தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டு இதுகுறித்து விசாரணை செய்ய மத்திய அரசு உத்தவிட்டது. இந்த குழுவில் மொத்தம் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தேர்வு செயல்முறையின் வழிமுறைகள், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளில் முன்னேற்றம் மற்றும் தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு ஆகியவை குறித்து முறையாக ஆய்வு செய்து அவற்றை சீர்திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கும். மேலும் இன்னும் இரண்டு மாதங்களில் இந்த குழு தனது ஆய்வறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | 2 இடங்களில் நீட் தேர்வு மோசடி நடைபெற்றிருப்பதாக திடுக் தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ