புது டெல்லி: முன்னாள் நீதிபதிகள், அதிகாரத்துவத்தினர், ராணுவ அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட 150 க்கும் மேற்பட்ட முக்கிய குடிமக்கள் ஒன்றாக இணைந்து, குடியுரிமை எதிர்ப்பு திருத்தச் சட்டம் (சிஏஏ -CAA) எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு (Ram Nath Kovind) கடிதம் எழுதினர். தேசத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் CAA சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர் -NPR) மற்றும் என்.ஆர்.சி (NRC) ஆகியவற்றிற்கு எதிராக "தவறான மற்றும் உந்துதல்" பிரச்சாரம் நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
அந்த கடிதத்தில், நடந்துகொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களை அனைத்து தீவிரத்தன்மையுடனும் பார்க்க வேண்டும். நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு (போரட்டக்காரர்கள்) பின்னால் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அந்த கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் பல்வேறு உயர் நீதிமன்றங்களின் 11 முன்னாள் நீதிபதிகள், 24 ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 11 முன்னாள் இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகள், 16 ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் மற்றும் 18 முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல்கள் அடங்குவர்.
பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதப்படுத்தவும், வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுக்கும் வகையில் ஒருங்கிணைந்த முறையில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். CAA, NPR மற்றும் NRC பற்றி ஒரு தவறான மற்றும் மோசமான கருத்துகள் பகிரப்படுவதாக கையொப்பமிட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் நாடு முழுவதும் அச்சம் பரவி வருகிறது என்றும் கூறியுள்ளனர்.
சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்த சில அமைப்புகளின் ஆதவுடன் போராட்டம் நடைபெறுகிறது.
இதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி 24 ஆம் தேதி, திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் (CAA - சிஏஏ) மற்றும் என்ஆர்சிக்கு (NRC - என்.ஆர்.சி) எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜனநாயக நிறுவனங்களுக்கு "பாதுகாப்பு" வழங்க வேண்டும் என்றும் நாட்டின் நன்கு அறியப்பட்ட 154 பேர் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.