குர்மித் ராம் கற்பழிப்பு வழக்கு: அசாதாரண சூழலில் ஹரியானா மற்றும் டெல்லி!
குர்மித் ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்!
100க்கு மேற்பட்ட வாகனங்கள் தீக்கு இரையானது, போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசி கூட்டத்தை கலைக்க முயற்சி!
டெல்லி எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. கலவரம் டெல்லியை எட்டியது, டெல்லி, சுற்றுபுற பகுதிகளில் 144 தடை பிறப்பிக்கப்பட்டது!
கலவரத்தில் பலி எண்ணிக்கை 28 எட்டியது!
முன்னதாக இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மித் ராம் ரஹிம் சிங் குற்றவாளி என நிறுபிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 28 ம் தேதி பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக தண்டைனையை உறுதி செய்யவுள்ளது. குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணை நீதிமன்ற நீதிபதி ஜக்டீப் சிங் ஆகஸ்ட் 28 ம் குவாண்டம் தீர்ப்பை வாசிப்பார் என தெரிகிறது