பனாஜி இடைத்தேர்தலில் மனோகர் பாரிக்கர் வெற்றி!

Last Updated : Aug 28, 2017, 11:49 AM IST
பனாஜி இடைத்தேர்தலில் மனோகர் பாரிக்கர் வெற்றி! title=

கோவா மாநில முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் போட்டியிட்ட பனாஜி சட்டப் பேரவை இடைத் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார்.

கடந்த வாரம் 23-ம் தேதி கோவா மாநிலத்தின் பனாஜி, வல்போய் ஆகிய தொகுதிகளில் சட்டப் பேரவை இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிரீஷ் சோதங்கரையும், கோவா சுரக்ஷா மஞ்ச் கட்சி வேட்பாளர் ஆனந்த் ஷிரோத்கரையும் எதிர்த்து மனோகர் பாரிக்கர் போட்டியிட்டனர்.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை பனாஜி நகர கேளிக்கை மன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இதில், போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கிரீஷ் சோதங்கரை 4803 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் மனோகர் பாரிக்கர்.

பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து தனது மக்களவை உறுப்பினர் பதவியை அடுத்த வாரத்தில் ராஜிநாமா செய்யவுள்ளதாக மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Trending News