இந்தியா-சீனா எல்லையில் சலசலப்பு; அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை குறித்து பேசுவதற்காக, வரும் 19ம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Last Updated : Jun 17, 2020, 03:46 PM IST
    1. வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு
    2. இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்திருப்பதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது.
    3. சீனா தரப்பில் 43 வீரர்களின் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா-சீனா எல்லையில் சலசலப்பு; அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு title=

புது டெல்லி: இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை குறித்து பேசுவதற்காக, வரும் 19ம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

"இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளின் நிலைமை குறித்து விவாதிக்க, பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள். "என்று பிரதமர் அலுவலகம் (PMO) டிவீட் ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஜூன் 19 மாலை 5 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும், இதில் கிழக்கு லடாக்கில் ரோந்து புள்ளி எண் 14 இல் உள்ள இந்தியப் படைகளுக்கும் சீன மக்கள் விடுதலை இராணுவம் (PLA) வீரர்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள்.

 

READ | கால்வானில் வீரர்களின் இழப்பு ஆழ்ந்த மன உளைச்சலையும் வேதனையையும் தருகிறது: ராஜ்நாத் சிங்

 

சீன PLAவால் இந்திய ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் திங்கள்கிழமை இரவு நடந்தது. இந்த மோதல் கிட்டத்தட்ட ஆறு முதல் ஏழு மணி நேரம் தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

லடாக் பிராந்தியத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சடலங்கள் மற்றும் காயமடைந்த இந்திய ராணுவ வீரர்களை கொண்டு வர இந்திய ஹெலிகாப்டர்கள் செவ்வாய்க்கிழமை சுமார் 16 முறை பறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்திருப்பதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது. மேலும் சிலர் பலத்த காயமடைந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதேபோல் சீனா தரப்பில் 43 வீரர்களின் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எல்லை மோதலைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள், தலைமை தளபதி ஆகியோருடன்  ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இந்தியா-சீனா எல்லைப்பிரச்சினை தொடர்பாக விவாதிக்க, வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Trending News