மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்!!
பிரதமர் மோடி தலைமையிலான கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது நிதி மந்திரியாக இருந்த அருண்ஜெட்லி, கடந்த 9 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுவாசப் பிரச்சனை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி உயிரிழந்தார். அவர் மரணம் அடைந்த போது பிரான்ஸ் உள்ளிட்ட மூன்று நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி டிவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்திருந்தார்.
முன்னதாக அருண் ஜெட்லியின் மறைவு குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘அருண் ஜெட்லி அரசியலில் ஜாம்பவான் ஆவார். இந்தியாவுக்கு நீடித்த பங்களிப்பை வழங்கிய ஒரு வெளிப்படையான தலைவராவார். அவரது மறைவு மிகுந்த மனவேதனையானது. ஜெட்லியின் மனைவி மற்றும் மகனிடம் எனது இரங்கலை தெரிவித்தேன். ஓம் சாந்தி. பாஜகவிற்கும், அருண் ஜெட்லிக்குமான பந்தம் பிரிக்கமுடியாத ஒன்று. அவசர காலங்களில் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அவர் முன்னணியில் இருந்தார், அவர் கட்சியின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வெளிப்படுத்தக்கூடிய எங்கள் கட்சியின் மிகவும் விரும்பப்பட்ட முகமாக மாறினார்’ என கூறியிருந்தார்.
இந்நிலையில், இதனால் அவரால் அருண் ஜேட்லி உடலுக்கு நேரில் மரியாதை செலுத்த முடியவில்லை. இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு மோடி இன்று காலை டெல்லி திரும்பினார். இதனை அடுத்து அவர் அருண் ஜேட்லியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், அங்கிருந்த ஜேட்லியின் உருவப்படத்திற்கும் மோடி அஞ்சலி செலுத்தினார். அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனிருந்தார்.
Delhi: Prime Minister Narendra Modi meets the family of late former Union Finance Minister #ArunJaitley at his residence. pic.twitter.com/cx0hRYYcfe
— ANI (@ANI) August 27, 2019