தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை!

வாஜ்பாய் நினைவிடத்தில் அவரது வளர்ப்பு மகள் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்களும் மரியாதை!!

Last Updated : May 30, 2019, 08:33 AM IST
தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை! title=

வாஜ்பாய் நினைவிடத்தில் அவரது வளர்ப்பு மகள் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்களும் மரியாதை!!

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் கோலாகல விழாவில் அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவரை தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்கிறார்கள்.

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, குலாம் நபி ஆசாத், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர். பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மோகன் ஜோஷி உள்ளிட்டோருடன் சிவசேனா, அகாலிதளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள், முப்படைத் தளபதிகள் என 8 ஆயிரத்துக்கும் அதிகமான விருந்தினர்கள் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர். இவ்விழாவில் பங்கேற்கப் போவதாக அறிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தமது முடிவை மாற்றிக் கொண்டு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். இதே போல் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனும் மோடி பதவியேற்பில் பங்கேற்கவில்லை.

மத்திய அமைச்சரவை பதவியேற்பதையொட்டி, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா கேட் அருகே உடைமைகளை சோதிக்க தனி சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு வருபவர்கள் தடையின்றி செல்வதற்கு ஏற்ப டெல்லியில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பயணிகள் விமானங்கள் தவிர வேறு எந்த ஒரு விமானமும் டெல்லி வானில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பதவியேற்பு விழா நடைபெறும் குடியரசுத் தலைவர் மாளிகை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று மாலை பதவியேற்க உள்ள நிலையில் பிரதமர் மோடி காலை 7 மணியளவில் மகாத்மா காந்தி நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட் பகுதிக்கு சென்று காந்தியடிகள் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடத்திலும் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அவருடன் பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள்  பலரும் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், போர் நினைவுச் சின்னத்திலும் உயிர் தியாகம் செய்த 25 ஆயிரத்து 942 வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி வீர வணக்கம் செய்தார். அவருடன் முப்படைத் தளபதிகளும் அணி வகுத்து மரியாதை செலுத்தினர்

 

Trending News