PNB fraud: நிரவ் மோடி வழக்கில் திடீர் திருப்பம்!

நிரவ் மோடியின் இருப்பு குறித்து அமெரிக்கா வெளியுறவுத்துறை-யால் உறுதி செய்யமுடியவில்லை என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Mar 2, 2018, 09:18 AM IST
PNB fraud: நிரவ் மோடி வழக்கில் திடீர் திருப்பம்! title=

நிரவ் மோடியின் இருப்பு குறித்து அமெரிக்கா வெளியுறவுத்துறை-யால் உறுதி செய்யமுடியவில்லை என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் வழக்கு தொடர்பாக தேடப்பட்டுவரும் நிரவ் மோடி அமெரிக்காவில் தான் உள்ளாரா என்பது குறித்து உறுதி படுத்த இயலவில்லை என அமெரிக்கா வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

PNB fraud...

பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தியாவின் 2-வது மிகப்பெரிய வங்கி ஆகும். இவ்வங்கி பங்குச்சந்தைக்கு அனுப்பியுள்ள தகவலின் படி ரூ.11,400 கோடி முறைகேடு நடந்திருப்பது குறிப்பிட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியது.

இந்த ஊழல் தொடர்பாக பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹுல் சோக்ஸி ஆகியோருக்குச் சொந்தமான 5,100 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க, சம்பந்தப்பட்ட நிரவ் மோடி தலைமறைவாகி விட்டார். மேலும் இந்த மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கடிதம் ஒன்றையும் எழுதினார்.

இந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தான் பெற்ற கடன் ரூ.5000 கோடிதான் எனவும் அதைத் திருப்பிக் கொடுப்பதற்காக அனைத்து வழிகளையும் வங்கி நிர்வாகம் முடக்கிவிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் இந்த அவசர முடிவினால் நிறுவனத்தின் பெயரும் கெட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டு, இதனால் கடனைத் திருப்பிக்கட்ட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து, கடந்த பிப், 27 ஆம் நாள் நிரவ் மோடி கூடுதலாக ரூ.1323 கோடி ஊழல் செய்துள்ளதாகவும், வரும் மார்ச் 12-ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் நிரவ் மோடி ஆஜராக வேண்டும் எனவும், தவரும் பட்சத்தில் அவருக்கு Non-Bailable பிடிவாரண்ட் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், நிரவ் மோடி அமெரிக்காவில் தான் உள்ளார் என ஊடக செய்திகள் வெளியானது. இதையடுத்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரியிடம் PTI செய்தி நிறுவனம் தொடர்பு கொண்டு நிரவ் மோடி அமெரிக்காவில் இருப்பதாக தொடர்பாக கேள்வி எழுப்பியது.

இந்த கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவு அதிகாரி, "நிரவ் மோடி அமெரிக்காவில் உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுவதை நாங்கள் அறிந்தோம். ஆனால், இந்த தகவலை எங்களால் உறுதி செய்ய முடியவில்லை" என தெரிவித்துள்ளார்.

Trending News