தமிழகத்துக்கு முதல் தடவை வருகை தந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!!

சென்னை விமான நிலையம் வந்த ஜனாதிபதியை முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Last Updated : Dec 23, 2017, 05:52 PM IST
தமிழகத்துக்கு முதல் தடவை வருகை தந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!! title=

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். 

அங்கு ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் சென்னை வந்த அவருக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

சென்னை விமான நிலையம் வந்த ஜனாதிபதியை முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓபிஎஸ், மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரை  உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து சென்னை வருகை தந்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மாலை 5.45 மணிக்கு கிண்டி லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடக்கும் 32-வது இந்தியன் என்ஜினீயரிங் மாநாட்டு நிறைவு விழாவில் அவர் பங்கேற்கிறார். 

அதை தொடர்ந்து,இன்று இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தங்கிவிட்டு, நாளை விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Trending News