பேராசையுடன் செயல்பட்டோர் வீழ்ந்துள்ளனர் என்பதற்கு வரலாறு சாட்சி - பிரதமர் மோடி!

சீன -இந்தியா எல்லையில் லடாக்கின் நிமூவில், பதற்றமான சூழலுக்கு மத்தியில் வீரர்கள் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 3, 2020, 02:58 PM IST
  • உலகப் போர்களாக இருந்தாலும் சரி, சமாதானமாக இருந்தாலும் சரி, தேவை ஏற்படும் போதெல்லாம், இந்த உலகம் துணிச்சலின் வெற்றியை கண்டிருக்கிறது.
  • புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணரை வணங்கும் நாம் தான், 'சுதர்ஷன சக்ரா' வைத்திருக்கும் கிருஷ்ணரையும் போற்றுகிறோம்.
  • பலவீனமானவர்கள் ஒருபோதும் அமைதியை விரும்ப முயற்சிக்க மாட்டார்கள். துணிச்சல் என்பது அமைதிக்கான ஒரு முன்நிபந்தனை.
பேராசையுடன் செயல்பட்டோர் வீழ்ந்துள்ளனர் என்பதற்கு வரலாறு சாட்சி - பிரதமர் மோடி! title=

சீன -இந்தியா எல்லையில் லடாக்கின் நிமூவில், பதற்றமான சூழலுக்கு மத்தியில் வீரர்கள் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

பிரதமர் மோடி(PM Narendra Modi) யின் உரையில் குறிப்பிடப்பட்ட சில முக்கிய தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது...

  • நீங்களும் உங்கள் தோழர்களும் காட்டிய துணிச்சல், இந்தியா(India)-வின் வலிமை குறித்து உலகிற்கு ஒரு செய்தி சென்றுள்ளது.
  • நீங்கள் இருக்கும் இடத்தை விடவும் உங்கள் துணிச்சல் மிகவும் உயரமானது என மோடி தெரிவித்துள்ளார். தற்போது வீரர்கள் இருக்கும் இடமான நிமூ, கடல் மட்டத்தில் இருந்து 11,000 அடி உயரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • கால்வான் பள்ளத்தாக்கில்(Galwan Valley) தங்கள் உயிர்களை தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு நான் மீண்டும் ஒருமுறை எனது அஞ்சலியை செலுத்த விரும்புகிறேன்.
  • உங்கள் தியாகம், தொண்டு காரணமாக தன்னம்பிக்கை இந்தியாவின் தீர்மானங்கள் மேலும் மேலும் வலுவடைகிறது.

READ | சீனாவுக்கு மற்றொரு அதிர்ச்சி: சீன தயாரிப்புகளை தடை செய்த இந்த மத்திய அமைச்சகம்

  • வீரர்களின் துணிச்சல் எல்லா இடங்களிலும் பேசப்படும். உங்கள் துணிச்சல் மற்றும் வீரம் பற்றிய கதைகள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிக்கின்றன.
  • பாரத மாதாவின் எதிரிகள் தற்போது உங்கள் வீரத்தையும், கோபத்தையும் கண்டிருக்கிறார்கள்.
  • பலவீனமானவர்கள் ஒருபோதும் அமைதியை விரும்ப முயற்சிக்க மாட்டார்கள். துணிச்சல் என்பது அமைதிக்கான ஒரு முன்நிபந்தனை.
  • உலகப் போர்களாக இருந்தாலும் சரி, சமாதானமாக இருந்தாலும் சரி, தேவை ஏற்படும் போதெல்லாம், இந்த உலகம் துணிச்சலின் வெற்றியை கண்டிருக்கிறது. மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக நாம் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

READ | இந்தியாவின் இராஜதந்திரத்தால் பீதியில் சீனா... இந்தியாவை மிரட்டிப் பார்க்கிறது...!!!

  • புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணரை வணங்கும் நாம் தான், 'சுதர்ஷன சக்ரா' வைத்திருக்கும் கிருஷ்ணரையும் போற்றுகிறோம்.
  • நாட்டின் பரப்பை விரிவாக்க விரும்புவோரின் காலம் முடிந்துவிட்டது, இது வளர்ச்சியின் காலம். விரிவாக்கத்தை நோக்கி சென்ற சக்திகள் தோற்கடிக்கப்பட்டன அல்லது பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன என்பதற்கு வரலாறு சாட்சி.
  • எனக்கு முன்னால் நிற்கும் பெண் வீரர்கனைகளைப் பார்க்கிறேன். எல்லையின் போர்க்களத்தில் இந்த காட்சி எனக்கு ஊக்கமளிக்கிறது.
  • எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான செலவினங்களை நாங்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளோம்.

Trending News