பிரதமர் மோடி வருகையால் சென்னையில் பாதுகாப்புகள் தீவிரம்!!

பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருவதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்குடன் கூடிய பாதுகாப்பு பணியில் 15,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Last Updated : Apr 12, 2018, 06:52 AM IST
பிரதமர் மோடி வருகையால் சென்னையில் பாதுகாப்புகள் தீவிரம்!! title=

பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருவதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்குடன் கூடிய பாதுகாப்பு பணியில் 15,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை மாமல்லபுரத்தில் இந்திய ராணுவம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்புத்துறை சார்பில் ராணுவ கண்காட்சி நடத்தப்படுகிறது.

இந்த கண்காட்சி சென்னை- மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் நேற்று துவங்கியது. ஏப்ரல் 14ம் தேதி வரை நடைபெறும் இந்த ராணுவ ககண்காட்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வரவுள்ளார்

முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் பிரதமரின் நடவடிக்கையின்மையைக் கண்டித்து, அவருக்கு கருப்புக்கொடி காட்டுவதாக திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அறிவித்துள்ளன. இதனால் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 5 ஆயிரம் போலீஸார் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சென்னை விமான நிலையம், நேற்று காலை 6 மணி முதல் 5 அடுக்கு பாதுகாப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்புக்காக டெல்லியிலிருந்து சிறப்பு பாதுகாப்புப் படையை சேர்ந்த 60 பேர் டி.ஐ.ஜி சர்மா தலைமையில், சென்னை வந்துள்ளனர்.

விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே விமான நிலையத்துக்குள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றன. கார் நிறுத்தும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
துப்பாக்கி ஏந்திய போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான டிக்கெட் மற்றும் முறையான அனுமதி இல்லாமல் விமான நிலைய வளாகத்துக்குள் வேறு யாருக்கும் அனுமதியில்லை. கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், ஆயுத படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Trending News