அமேதி வாக்குச்சாவடியை காங்., கைப்பற்றியாதாக ஸ்மிருதி இரானி புகார்!

அமேதி தொகுதியில் வாக்குச்சாவடியை காங்கிரஸ் கட்சியினர் கைப்பற்றிவிட்டதாக அமைச்சர் ஸ்மிருதி இரானி புகார் தெரிவித்துள்ளார்!!

Last Updated : May 6, 2019, 12:48 PM IST
அமேதி வாக்குச்சாவடியை காங்., கைப்பற்றியாதாக ஸ்மிருதி இரானி புகார்! title=

அமேதி தொகுதியில் வாக்குச்சாவடியை காங்கிரஸ் கட்சியினர் கைப்பற்றிவிட்டதாக அமைச்சர் ஸ்மிருதி இரானி புகார் தெரிவித்துள்ளார்!!

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று 7 மாநிலங்களில் 51 தொகுதிகளில் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடை பெற்று வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 12 தொகுதிகள், மத்தியப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 7 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், காஷ்மீரில் 2 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமேதி தொகுதியில் வாக்குச்சாவடியை காங்கிரஸ் கட்சியினர் கைப்பற்றிவிட்டதாக அமைச்சர் ஸ்மிருதி இரானி புகார் தெரிவித்தார். வாக்குச்சாவடி கைப்பற்றப்பட்டது தொடர்பான புகாரை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ளதாக இரானி பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய ஸ்மிருதி இரானி, அமேதி தொகுதி மக்களுக்கு ராகுல் ஏன் இங்கு இல்லை என்பது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் ராகுல் காந்தி ஏன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்று கேட்ட ஸ்மிருதி, அவருக்கு அமேதி தொகுதி மக்கள் மீது அக்கறை இல்லை என்றும் குற்றம்சாட்டினார். 

இதற்க்கு முன்னதாக, அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கான பொத்தானை அழுத்த கையை பிடித்து நிர்பந்தித்ததாக பெண் வாக்காளர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் தான் பாஜகவிற்கு வாக்களிக்க விரும்பியதாகவும் அப்பெண் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த வீடியோவை அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும், நிர்வாகத்திற்கும் தேர்தல் ஆணையத்திற்கும் எச்சரிக்கை செய்தேன் (அமேதிவில் கைப்பற்றும் சாவடி), அவர்கள் நடவடிக்கை எடுக்க நம்புகிறேன். ராகுல் காந்தியின் இந்த வகையான அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டுமா அல்லது இல்லையா என்பதை நாட்டின் மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

 

Trending News