ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக்?

Last Updated : Jul 11, 2017, 09:52 AM IST
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக்? title=

ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த லீக் தகவலை ஜியோ நிறுவனம் மறுத்துள்ளது.

மிக குறைந்த கட்டணத்தில் டேட்டா வழங்கியது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இதனால் மற்ற நிறுவனங்களும் சலுகைகளை அள்ளி வழங்கின. ஜியோ அறிவித்த குறைந்த விலையில் 4ஜி டேட்டா திட்டத்தால் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தன. 

இந்நிலையில் 100 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளரின் பெயர், இ-மெயில் ஐ.டி, மொபைல் எண், ஆதார் எண், சிம் கார்டு ஆக்டிவேட் ஆன தேதி உள்ளிட்ட தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனை ஜியோ நிறுவனம் மறுத்துள்ளது. தங்களது வாடிக்கையாளர்களின் தகவல் அதிக பாதுகாப்புடன் பராமரிக்கப்படுவதாக ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News