மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ரிஷி குமார் சுக்லா இன்று சிபிஐயின் புதிய இயக்குனராக பதவியேற்றுக் கொண்டார்.
Delhi: Rishi Kumar Shukla takes charge as the Director of Central Bureau of Investigation (CBI). pic.twitter.com/9cM1gQK2kE
— ANI (@ANI) February 4, 2019
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறினர். இதையடுத்து இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. மேலும் இடைக்கால சிபிஐ இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அலோக் வர்மாவை மீண்டும் பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்றதை தொடர்ந்து அவர் தீயணைப்புத்துறை இயக்குனராக மாற்றப்பட்டார். ஆனால் தீயணைப்புத்துறை இயக்குனர் பதவியை ஏற்க மறுத்து அலோக் வர்மா ராஜினாமா செய்தார்.
இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் தேர்வுக்குழு கூட்டம் நடந்தது. இதையடுத்து புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லாவை நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ரிஷி குமார் சுக்லா இன்று சிபிஐயின் புதிய இயக்குனராக பதவியேற்றுக் கொண்டார்.
முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா பதவி விலகிய பிறகு இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.