தொடர் உயிர் பலி கோரும் டெல்லி பனிமூட்டம்!

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக தொடர்ந்து விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. 

Last Updated : Jan 7, 2018, 10:53 AM IST
தொடர் உயிர் பலி கோரும் டெல்லி பனிமூட்டம்! title=

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக தொடர்ந்து விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில் இன்று அதிகாலையில் பனிமூட்டம் காரணமாக, டெல்லி - சண்டிகார் தேசிய நெடுஞ்சாலையில் பளு தூக்கும் வீரர்கள் சென்ற கார் சாலை மைய தடுப்பு மற்றும் சாலையோர மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கய வீரர்கள் டெல்லியில் இருந்து பானிபட் சென்ற போது காலை 4 மணியளவில் அலிபுர் கிராமத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது!

விசாரணையில் கார் வேகமாக சென்றுள்ளது என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த இடத்தில் மதுபாட்டீல்கள் தென்பட்டதால் பயணித்தவர்கள் மது அருந்திவிட்டு காரை ஓட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது!

விகத்தில் சிக்கியவர்கள் உலக சாம்பியன் சாக்‌ஷாம் யாதவ் மற்றும் பாலி, ஹரீஸ், தின்கு மற்றும் சுராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Trending News