குழி நிறைந்த சாலைகளை நடிகை கன்னத்தோடு ஒப்பிட்ட அமைச்சர்!

மத்திய பிரதேச அமைச்சர் PC சர்மா செவ்வாய்க்கிழமை பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவின் 'கன்னங்களுடன்' மாநில சாலைகளின் நிலைமைகளை ஒப்பிட்டு சர்ச்சை உண்டாக்கியுள்ளார். 

Last Updated : Oct 16, 2019, 08:52 AM IST
குழி நிறைந்த சாலைகளை நடிகை கன்னத்தோடு ஒப்பிட்ட அமைச்சர்! title=

மத்திய பிரதேச அமைச்சர் PC சர்மா செவ்வாய்க்கிழமை பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவின் 'கன்னங்களுடன்' மாநில சாலைகளின் நிலைமைகளை ஒப்பிட்டு சர்ச்சை உண்டாக்கியுள்ளார். 

மேலும் ஆளும் காங்கிரஸ் அரசு குண்டும் குழிமாய சாலைகளை நடிகை ஹேமா மாலினி-யின் 'கன்னங்கள்' போல மாற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்மா, பொதுப்பணி மேம்பாட்டு (PWD) அமைச்சர் சஜ்ஜன் வர்மாவுடன், போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் பகுதியில் உள்ள சாலைகளின் நிலையை ஆய்வு செய்தபோது, "சாலைகள் விஜயவர்கியாவின் கன்னங்கள் போன்று குண்டும் குழியுமாக இருப்பதாக குறிப்பிட்டார், மேலும் மோசமான சாலைகளை நடிகை ஹேமா மாலினியின் கன்னத்தை போன்று பலபலப்பானதாக மாற்ற ஆளும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் இரண்டு ஆண்டு அறிக்கையை தோண்டி எடுத்து ("மத்திய பிரதேசத்தில் சாலைகள் வாஷிங்டனில் உள்ள சாலைகளை விட சிறந்தவை") சர்மா தனது கருத்தை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்., "மத்திய பிரதேசத்தில் சாலைகள் வாஷிங்டனைப் போலவே கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த சாலைகளுக்கு என்ன நடந்தது இப்போது? பலத்த மழைக்குப் பிறகு, எல்லா இடங்களிலும் குழிகளா மாறி உள்ளன. தற்போது, சாலைகளின் நிலை பெரியம்மை தழும்புகள் போன்று உள்ளது, சுருக்கமாக சொன்னால்., சாலைகளின் நிலை கைலாஷ் விஜயவர்கியாவின் கன்னங்களைப் போல மாறிவிட்டதாகத் தெரிகிறது. " என குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்., "இந்த சாலைகள் 15 நாட்களுக்குள் சரிசெய்யப்படும், விரைவில் அவற்றை ஹேமா மாலினியின் கன்னங்கள் போல உரு மாற்றுவோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாலைகளின் நிலை மோசமடைந்து வருவதாக கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தை மத்திய பிரதேச சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா விமர்சித்த சில நாட்களுக்குப் பின்னர் ஷர்மாவின் இந்த அதிரடி அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாலைகள் பாழடைந்த நிலையில் இருப்பதால் எந்த விபத்துக்கள் நடைபெறுகின்றன என்று அவர் ட்வீட் செய்திருந்தார். எல்லாவற்றிற்கும் மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டுவதன் மூலம் மாநில அரசு பொறுப்பிலிருந்து ஓடிவருகிறது என்றும் அவர் கூறினார்.

"மாநில அரசு அதிக அளவு பட்ஜெட்டைக் கொண்டுள்ளது, அதில் சாலைகளை சரிசெய்ய அரசாங்கம் செலவிட வேண்டும்" என்று அவர் தனது ட்வீட்டில் மேலும் தெரிவித்தார்.

Trending News