ராபர்ட் வத்ரா வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி!

பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராபர்ட் வத்ரா வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது!

Last Updated : Sep 14, 2019, 07:18 AM IST
ராபர்ட் வத்ரா வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி! title=

பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராபர்ட் வத்ரா வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது!

லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புடைய வீடுகள் மற்றும் சொத்துகள் வாங்கியது தொடர்பாக ராபர்ட் வதேரா, அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முன்ஜாமீன் அளித்தது.

மேலும் விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஒத்துழைப்பு அளிக்கவேண்டும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்பது போன்ற நிபந்தனைகளை ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்தது.

இந்நிலையில் தொழில் விஷயமாக ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல வேண்டும் என வாத்ரா தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவின் மீது நேற்று விசாரணை நடத்திய சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் செப்டம்பர் 21-ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 8-ஆம் தேதிவரை ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார்.

Trending News