சபரிமலையில் நாளை நடை திறப்பு திரைப்பட உள்ள நிலையில், பம்பையில் இருந்து சபரிமலை சன்னதி வரையில் பாதுகாப்பிற்காக 1500 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.....
அனைத்து வயதினரையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டபின், கோவிலுக்குள் நுழைய முயன்ற பத்திரிகையாளர்கள் உள்பட 10 பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதனடிப்படையில், மாநிலம் முழுவதும் போலீஸார் கடந்த 2 நாட்களாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில், மாநிலம் முழுவதும் 1,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லுக்-அவுட் சுற்றறிக்கை அனுப்பப்பட்டவர்களில் 150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சித்திரை ஆட்ட திருநாள் பிறந்தநாளையொட்டி சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை வருகிற 5 ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி இந்த முறையும் சபரிமலைக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்புள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மீண்டும் அவர்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Around 1500 police personnel have been deployed from Pamba to Sannidhanam: IG Ashok Yadav to ANI on #SabarimalaTemple to open for a day tomorrow #Kerala pic.twitter.com/3bKEV8Tfm1
— ANI (@ANI) November 4, 2018
இந்நிலையில் சபரிமலை பம்பாய் நதிக்கரையில் இருந்து சபரிமலை சந்நிதானம் வரையில் சுமார் 1500 காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சபரிமலையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (06-11-2018) 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.