உச்ச நீதிமன்ற வளாகம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த குற்றச்சாட்டை ரஞ்சன் கோகாய் மறுத்த நிலையில், இதுகுறித்து விசாரிக்க 2 பெண்கள் உள்பட 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த குழுவின் விசாரணையில், ரஞ்சன் கோகாய் மீதான புகாருக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், டெல்லியில் உச்ச நீதிமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை பெண் நீதிபதிகள் மற்றும் பெண் சமூக ஆர்வாளர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை அணுகிய விதத்தில் நீதிபதிக்கு ஆதரவாக ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு அறிக்கையை சமர்ப்பித்திருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.