'Sorry!':பிரதமர் மோடியின் உரையை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்டார் சஷி தரூர்

பிரதமர் மோடி வங்க தேசத்தின்  சுதந்திரத்திற்காக  சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டேன் என கூறியதை காங்கிரஸ் எம்பி சஷி தரூர் விமர்ச்சனம் செய்திருந்தார்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 27, 2021, 02:06 PM IST
  • நான் சொன்னது தவறு என்றால் அதை ஒப்புக்கொள்வதில் தயக்கம் இல்லை என்றார் சஷி தரூர்
  • பிரதமர் மோடி வங்கதேசத்தில் நிகழ்த்திய உரையை காங்கிரஸ் தலைவர் விமர்சித்திருந்தார்.
  • அவர் இதற்காக பிரதமர் மோடியிடன் மன்னிப்பு கேட்டார்.
'Sorry!':பிரதமர் மோடியின் உரையை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்டார் சஷி தரூர் title=

புதுடெல்லி: பங்களாதேஷில் பிரதமர் நரேந்திர மோடி  உரையை விமர்சித்த ஒரு நாள் கழித்து, காங்கிரஸ் தலைவர் சஷி தரூர் சனிக்கிழமை (மார்ச் 27, 2021) மன்னிப்பு கேட்டார். நான் சொன்னது தவறு என்றால் அதை ஒப்புக்கொள்வதில் தயக்கம் இல்லை என்றார் சஷி தரூர்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தனது நாட்டின் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு   (PM Narendra Modi) விடுத்த அழைப்பினை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்றார்.

வங்கதேசத்தின் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, “வங்க தேச சுதந்திர போராட்டத்தின் போது எனக்கு 20 - 22 வயது இருக்கும் என்னுடைய நண்பர்களுடன் வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டேன். அந்த போராட்டத்தின் போது நான் சிறைக்கு சென்றேன். வங்கதேசத்தில் பாகிஸ்தான் அரங்கேற்றிய அட்டூழியங்கள் பற்றி எனக்கு மிக நன்றாக தெரியும். அந்த புகைப்படங்களை பார்த்த எனக்கு தூக்கம் வரவில்லை.” என்றார். 

ALSO READ | வங்கதேச சுதந்திர போராட்டம் எனது வாழ்நாளின் முதல் போராட்டம்: பிரதமர் மோடி

உரையை விமர்சித்த சஷி தரூர் தனது  ட்விட்டர் கணக்கில், "சர்வதேச கல்வி: எங்கள் பிரதமர் பங்களாதேஷுக்கு இந்திய" போலி செய்திகளை " பற்றி எடுத்துக் கூறுகிறார். இதில் அபத்தமான விஷயம் என்னவென்றால், வங்க தேசத்திற்கு விடுதலை வாங்கித் தந்தவர் யார் என அனைவருக்கும் தெரியும்." என ட்வீட் செய்திருந்தார்.

இருப்பினும், 12 மணி நேரம் கழித்து, காங்கிரஸ் எம்.பி. அவர் தவறு என்று ஏற்றுக்கொண்டு, "நான் தவறு செய்யும் போது ஒப்புக்கொள்வதில் எனக்கு கவலையில்லை. நேற்று, தலைப்புச் செய்திகளையும்  அவசரமாக முழுமையாக வாசிக்காமல்  நான் ட்வீட் செய்தேன்"  என கூறிய அவர், "இந்திரா காந்தியை பற்றி பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிடாமல் விடுபட்டுவிட்டார் என நினைத்தேன். அவர் இந்திரா காந்தியை பற்றி குறிப்பிட்டார். மன்னிக்கவும்!" என ட்வீட் செய்துள்ளார். 

வங்க தேச பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று உள்ள ஜசோளீஸ்வரி காளி கோவிலுக்கு சென்று பூஜை செய்தார். 

ALSO READ | அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்க தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆதரவு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News